தன்வந்திரி பீடத்தில் 29.12.2018 சனிக்கிழமை
காலண்டர்
வெளியீட்டு விழாவும் காலபைரவர் யாகமும் 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணர் யாகத்துடன் பகவத் கீதை நூல் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி சென்ற 29.12.2018 சனிக்கிழமை காலை மாலை இருவேளையும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்வர்ண
பைரவர் யாகம், காலபைரவர் யாகம் மற்றும் காலண்டர் வெளியீட்டு விழாவும், 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணர் யாகத்துடன்
பகவத் கீதை நூல் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதில் சென்னை சாய் டிவி நிர்வாக
இயக்குநர் சாய்பிரேமி திரு. கணேசன், ஸ்ரீசங்கரா
டிவி CEO திரு. சுரேஷ் குமார், குணச்சித்ர நடிகர் திரு. டெல்லி கணேஷ், தினகரன் ஆன்மிகம்
ஆசிரியர் திரு. கிருஷ்ண , கனரா வங்கி மேலாளர் திருமதி. சாந்தி, திரு. பிரதீப் ஹைத்ராபாத்,
திரு. பிரகாஷ் சென்னை, டாக்டர். பாலமுருகன் வேலூர், தாமிரா வெப் டிவி இயக்குனர் திரு.
நாகமிணியன் போன்ற ஏராளமானவர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தனர். இதனை தொடர்து வருட பிறப்பை முன்னிட்டு வருகிற 01.01.2019 காலை
10.00 மணி முதல் 11.30 மணி வரை உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற
ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment