வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில்கல்யாண
வரம் தரும் கல்யாண கணபதி யாகம்.நாளை
27.12.2018 காலை நடைபெறுகிறது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகம் அனைத்திற்கும் முழுமுதல் கடவுளும், காரியத்தடைகளை
நிவர்த்தி செய்து வாழ்வில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் கொடுத்து நம்மை காக்கும்
கடவுளான மஹா கணபதியை வேண்டி நாளை 27.12.2018 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு ஆண் – பெண் திருமணத்தடைகள் விலக
மாபெரும் கல்யாண கணபதி யாகம் சிறந்த வேத பண்டிதர்களை கொண்டு நடைபெற உள்ளது.
இந்த
யாகத்தின் மூலம் ராகு – கேது தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், அஷ்டம சனி, ஜன்ம
சனி போன்ற நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், பல்வேறு பாபங்கள், சாபங்கள்
நீங்கி கல்யாண கணபதியின் அருள் பெற்று விரைவில் திருமணம் நடைபெற வேண்டி அஷ்ட திரவியங்களுடன்,
64 மூலிகைகள் கொண்டு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆசிகளுடன் இந்த யாகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment