30.12.2018 ஞாயிற்றுக்கிழமைதன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ கிருஷ்ணர் யாகத்துடன்பகவத் கீதை நூல் வழங்கும் விழாநடைபெறுகிறது.
திரைப்பட நடிகர் “கலைமாமணி”
திரு. டெல்லி கணேஷ் அவர்கள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ கிருஷ்ணர் யாகத்துடன் பகவத் கீதை நூல் வழங்கும் விழா நடைபெறுகிறது.
பகவத் கீதை பலன்கள்
:
அறிவு மூலம்
அறியாமை அகற்றும். உள் வலிமை. சமநிலையான வாழ்க்கை வாழ வழிகாட்டுதல்கள். நடவடிக்கை முக்கியத்துவம். பயம் மற்றும் துன்பத்திலிருந்து சுதந்திரம். கடந்த பிறப்புகளின் பாவங்கள் கூட அழிக்கப்படுகின்றன. வேலை வெற்றி.
நல்ல செயல்களின் வெற்றி. துன்பத்தை நீக்குதல். நோய் நீக்கம். வறுமையை அகற்றுதல்.
கோளாறுகளால் ஏற்படும் பிரச்சினைகளை நீக்குதல். மனநல பிரச்சினைகள் மற்றும் துயரத்தை
அகற்றும் போன்ற பல்வேறு கர்மவினைகளுக்கு துயர்த்துடக்கும் புனித நூல் தான் பக்வத் கீதையாகும். இப்புத்தகத்தை இலவசமாக பெற்று அனைவரும் படித்து பயன் பெற்று ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அருளுக்கு பாத்திரதாரர் ஆகும்படி பிரார்த்திக்கின்றோம்.
ஸ்ரீ கிருஷ்ண யாகம்
பலன்கள் :
பகவத் கீதையை
வாசிப்பதுடன் ஸ்ரீ கிருஷ்ணரின் யாகத்தில் பங்கேற்பதின் மூலம் இரட்டிப்பு பலன்களை
பெறலாம். இவற்றின் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும், மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம்
குழந்தைக்கு ஏற்படாது. தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள். அரசியல் ஞானம் உண்டாகும்.
நிர்வாக திறன் அதிகரிக்கும். மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். திருமணத்
தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில்
விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் நன்கு செழிப்பாக வளரும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும்.
அமைதி நிலவும், ஆற்றல் பெருகும், வறுமை இல்லா
வாழ்வு அமையும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம்
அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும்.
பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து
கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.
இச்சிறப்பு
மிகுந்த யாகத்திலும் விழாவிலும்
ஸ்வாமிகளின் ஆசிகள் பெற்ற திரைப்பட நடிகர் “கலைமாமணி” திரு. டெல்லி கணேஷ் அவர்கள், சென்னை தினகரன் ஆன்மிகம் பொறுப்பாசிரியர் திரு. கிருஷ்ணா அவர்கள், திருநெல்வேலி தாமிரா டிவி நிர்வாக இயக்குநர் திரு. P.R.நாகமணியன் அவர்கள் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இரத்தினகிரி கிளை கனரா வங்கி மேலாளர் திருமதி. சாந்தி ஆறுமுகம் அவர்கள் செய்து வருகிறார்.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment