வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்இன்று
22.12.2018 சனிக்கிழமை
பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி
இன்று 22.12.2018 சனிக்கிழமை
பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல்
12.00 மணி வரை முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது.
குழந்தை
பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு ஏற்படுகின்ற காலசர்ப தோஷம், சர்ப தோஷம், பித்ரு
தோஷம், குலதெய்வ சாபம் போன்ற பல்வேறு தோஷங்கள் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம்
கிடைக்க வேண்டி சந்தான கோபால யாகமும், ஸ்ரீகிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும், ஆண்
பெண் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமத்துடன் பங்குபெற்ற
ஆண் பெண்களுக்கு கலசாபிஷேகமும் மாங்கல்ய பூஜையும் நடைபெற்று யக்ஞஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment