Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, December 25, 2018

2019 Calendar Releasing Ceremony - Kalabhairava Yagam ....


தன்வந்திரி பீடத்தில்வருகிற 29.12.2018 சனிக்கிழமைவாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்தேய்பிறை அஷ்டமியில்
காலண்டர் வெளியீட்டு விழாவும்காலபைரவர் யாகமும் நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 29.12.2018 சனிக்கிழமை காலை மாலை இருவேளையும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்வர்ண பைரவர் யாகம், காலபைரவர் யாகம் மற்றும் காலண்டர் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது.

ஸ்வர்ண பைரவர் யாகம், காலபைரவர் யாகம் :

ஸ்ரீ காலபைரவர ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம் நடைபெற்று பைரவர்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து செவ்வரளி பூக்களால் அர்ச்சனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

இந்த யாகத்தில் பக்தர்களின் பலவிதமான தோஷங்கள் நீங்கி தேவைகள் பூர்த்தி அடையவும் கீழ்கண்ட காரணங்களுக்காகவும் பிரார்த்தனை நடைபெற உள்ளது. யாகத்தில் வர வேண்டிய பணம் வந்து சேரவும், தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை அமைய வேண்டியும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடவும், வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் நீங்கி, வலியும், வேதனையும் பெருமளவு குறையவும், சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரவும். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகவும், தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லவும் பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது.

மேலும் அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகவும், பணம் சார்ந்த பிரச்னைகள் தீரவும், கர்மவினைகள் தீரவும், தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெறவும், வெளி நாடு செல்ல வாய்ப்பு ஏற்படவும், வெளி நாட்டில் வாழ்பவர்கள் நிம்மதியாக இருக்கவும், செய்வினை மாந்திரீகம், சத்ரு உபாதை போன்றவைகளால் ஏற்படும் தொல்லைகள் அகலவும் மேற்கண்ட யாகங்கள் நடைபெற உள்ளது.

2019 ஆம் ஆண்டு தினசரி காலண்டர் வெளியீட்டு விழா :

இதனை தொடர்ந்து மாலை 5.00 மணியளவில் அழகிய வண்ணத்தில் ஆரோக்ய கடவுளின் அழகு திருமேனியுடன் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டு தினசரி காலண்டர் வெளியிடப்பட உள்ளது. இதில் சென்னை சாய் டிவி நிர்வாக இயக்குநர் சாய்பிரேமி திரு. கணேசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்  தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


No comments:

Post a Comment