வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில்
வைகுண்ட
ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற
லக்ஷ
ஜப மஹா
ஸுதர்சன ஹோமத்தில்மேதகு
முன்னாள் ஆளுனர் V.சண்முகநாதன் பங்கேற்று
மீண்டும் பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர
மோடி ஆக வேண்டியும்,
அயோத்தியில்
ராமர் கோவில் விரைவில் அமைய வேண்டியும், தேச பக்தர்கள்
நலன் வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு”
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி
உலக நலன் கருதி இன்று 18.12.2018 செவ்வாய்கிழமை
காலை 5.30 மணி
முதல் பிற்பகல் 12.30 மணி வரை
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லக்ஷ ஜப மஹா சுதர்சன யாகம் நடைபெற்றது.
காலை 5.30 மணிக்கு சொர்க வாசல் திறப்பு
நிகழ்ச்சியுடன், கோ பூஜை, திருப்பாவை, திருவெம்பாவை, வேத பாராயணத்துடன் ஸ்ரீ
தன்வந்திரி மூலவர் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளித்தார். இதனை தொடர்ந்து லக்ஷ
ஜப சுதர்சன மஹா யக்ஞத்திற்கான யாகசாலை பூஜை, கலச பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் லக்ஷ
ஜப மஹா சுதர்சன ஹோமத்தின் பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் அருணாசல பிரதேசம்,
மணிப்பூர், மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுனர் மேதகு V.சண்முகநாதன்
அவர்கள் பங்கேற்று பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்
என்றும், அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் அமைந்து கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும்,
தேச மக்களின் ஆயுள், ஆரோக்யம் வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்தார். முன்பாக
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பாரத மாதாவிற்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில்
பங்கேற்று தேச மக்களுக்காக பிரார்த்தனை செய்தார்.
அதனை
தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று ஸ்ரீ சுதர்சன சக்கிரத்தாழ்வாருக்கு நவகலச திருமஞ்சனம்
நடைபெற்றது. இதில் RSS, BJP, VHP, மாவட்ட நிர்வாகிகள், பொருப்பாளர்கள், உறுப்பினர்கள்
கலந்து கொண்டு சிறப்பித்து, யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசி பெற்றனர். நிறைவாக
அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment