தன்வந்திரி
பீடத்தில்
இருவேறு நிகழ்ச்சிகள்.
14 ஆம் ஆண்டு 108 சுமங்கலிகள்
பங்கேற்கும் 108 சுமங்கலி பூஜையுடன் குறுந்தகடு வெளியிட்டு
விழா,
108
கலசங்களில் 108 மூலிகை தீர்த்த
திருமஞ்சனம் மற்றும் சிறப்பு யாகங்கள் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
தன்வந்திரி பீடத்தில் “யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்” ஆசிகளுடன்
உலக நலன் கருதியும், க்ஷேத்திர அபிவிருத்தியை முன்னிட்டு சுமங்கலி பூஜை 108 சுமங்கலிகளை கொண்டு 14.12.2018 வெள்ளிக்கிழமை 14 ஆம் ஆண்டு சுமங்கலி பூஜை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமங்கலிகளுக்கு பாத பூஜை செய்து
புடவை, ரவிக்கை துண்டு, மஞ்சள், குங்குமம், புஷ்பம், வெற்றிலை பாக்கு, பழம்,
சோப்பு, சீப்பு, கண்ணாடி, கண் மை, வளையல், இனிப்பு, போன்ற சௌபாக்ய பொருட்கள் 108 சுமங்கலிகளுக்கு
சௌபாக்ய பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் வருகிற மார்ச் மாதம் 13 முத்ல் 17 வரை
நடைபெற உள்ள ஷோடஷ திருக்கல்யாணம், ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா, 15 வது ஆண்டு
விழா முன்னிட்டு மஹோத்சவம் – 2019 குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. திரு.
ஊட்டி ராஜசேகர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். திருமதி. நிர்மலா முரளிதரன்
அவர்கள் குற்று விளக்கு ஏற்றி, திரு. சாமவேதி ராமகிருஷ்ண சர்மா அவர்கள் வேத
மந்திரங்கள் முழங்க இந்த குறுந்தகடை,
முதன்மை பொது மேலாளர், பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்,
வேலூர் தொலை தொடர்பு மாவட்டம் உயர்திரு. K. வெங்கடராமன் அவர்கள் வெளியீட சென்னை, கவிதை உறவு மாத இதழ் ஆசிரியர்,
கலைமாமணி ஏற்வாடி S.ராதாகிருஷ்ணன் அவர்கள் பெற்றுகொண்டார்.
இவ்விழாவில் திரு. T.R.வேதநாயகம், திரு. V.சச்சிதானந்தம், திரு.
Dr.R. குழந்தைவேல், திரு. W.G.முரளி, திரு. W.R.மகேந்திரவர்மன்,
திரு. M.D.துரைவேல், திரு.
A.M.உதயசங்கர், திரு. P.சதீஷ்குமார்,
திரு. N.T.சுரேஷ், திரு.
D.குமரேசன், திரு. R.கனகராஜ்,
திரு. R.பிரகாஷ், திரு.
சஞ்சீவி – முரளி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வாலாஜாபேட்டை சுகாதாரத் துறை திரு.ராஜசேகர் அவர்கள்
நன்றி தெரிவித்தனர்.
இவ்வைபவத்தை முன்னிட்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும்,
நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம்
கிடைக்கவும், பிரிந்திரிக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும்,
குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து ஸ்ரீ
காயத்ரீ ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்பரக்ஷாம்பிகை யாகங்கள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத
தன்வந்திரி பெருமாளுக்கு 15.12.2018
சனிக்கிழமை காலை
10.30
மணி முதல் பிற்பகல்
1.00
மணி வரை சிறப்பு
தன்வந்திரி ஹோமத்துடன் 108
கலசங்களில், 108 மூலிகை தீர்த்த திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் சென்னை கொளத்தூர்,
ராகவாஸ்ரமம் மாதாஜி திருமதி. சுசீந்திரம் ராஜலக்ஷ்மி,
.Dr.R.பிரதாப் குமார், திரு.N.அறிவுசெல்வம் I.P.S., Dr.M.ராமசுப்ரமணியம்
I.P.S., திரு.A.V.பட்டாபிராமன், திருமதி. சீதா பட்டாபிராமன், திரு.P.மலைச்சாமி D.S.P., திரைப்பட இயக்குனர் திரு. ஆதிராஜன், திரு. பொன்ராஜசேகர், சென்னை தீநகர் திரு.R.பிரகாச், திரு. V.உதயகுமார்,
திரு. R.கனகராஜ், Dr. அனுராதா,
சென்னை பத்மநாபா தியேட்டர் திரு.சுரேஷ் அவர்கள்
மற்றும் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment