வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில்
வருகிற 18.12.2018 செவ்வாய்கிழமைவைகுண்ட
ஏகாதசியை முன்னிட்டுலக்ஷ
ஜப மஹா
ஸுதர்சன ஹோமம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி
உலக நலன் கருதி வருகிற 18.12.2018 செவ்வாய்கிழமை
காலை 5.30 மணி
முதல் பிற்பகல் 12.30 மணி வரை
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லக்ஷ ஜப மஹா சுதர்சன யாம் நடைபெறுகிறது. மேற்கண்ட யாகம் காலை 5.30 மணிக்கு சொர்க வாசல் திறப்பு
நிகழ்ச்சியுடன் நடைபெற உள்ளது.
ஸுதர்சன ஹோமம் பலன்கள் :
ஸுதர்சன ஹோமம் செய்யும்போது ஸுதர்சன சக்ரத்தின்
தேவதை, ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீதன்வந்திரி என்று பல்வேறு தேவதைகள்
பூஜிக்கப் படுகின்றனர். இதனால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.
நாம் வேண்டிக்கொள்ளும் நல்ல விஷயங்கள்
நிறைவேறும், ஐஸ்வர்யம் தனம், செல்வம் அபிவிருத்தி, ஏழ்மை விலகுதல், வியாதி, ரோக நிவாரணம், மன நிம்மதி, எடுத்த கார்யத்தில் வெற்றி, வீடு நாடு நலம் பெறும், ஆபத்து
நீங்கும், பசு விருத்தி பெறும், எதிரிகள் தொல்லை விளகும், கோபம் குறையும், சுக
பிரசவம் ஆகும், ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.
நமது முயற்சிக்கு ஏற்படும் தடங்கல்கள் நீங்கும், தொல்லைகள் நீங்கும், எதிரிகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள்
விலகும். சுதர்சன சக்ரமும், அதன் தேவதையும், அதன் எஜமானன் ஸ்ரீமன்நாராயணனும், அபரிமிதமான் சக்தி வாய்ந்தவர்கள். இது ஒரு மிகுந்த சக்தி வாய்ந்த ஹோமம். இந்த
மந்திரங்களில் பீஜாக்ஷரங்கள் அடங்கியுள்ளன.
ஸுதர்சனத்தின் சக்தி :
இது பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் மிகச்சக்தி வாய்ந்த
ஆயுதம். பல்லாயிரக்கணக்கான சூரிய ஒளியின் தேஜஸ் கொண்டது. இதன் வெளி வட்டம்
கூர்மையான பற்கள் கொண்டது மிகவும்
வேகமாகச் சுழன்று எதிரிகளை வெட்டி வீழ்த்தும். தன் வேலை முடிந்தவுடன் மீண்டும் கிளம்பிய இடத்துக்கே திரும்பி வரும்
சக்தி படைத்தது. இவ்வளவு மகிமை வாய்ந்த ஸுதர்சன சக்கிரத்தை வணங்கிச் செய்யப்படும்
இந்த ஹோமத்தில் முடிந்தவரை எல்லோரும் கலந்து கொண்டு எல்லா நன்மைகளையும் பெறலாம்.
என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment