Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, December 27, 2018

Hanuman Jayanti 2019


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,ஹனுமத் ஜெயந்தி விழாவைமுன்னிட்டு 04.01.2019 முதல் 06.01.2019 வரை
நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வருகிற 05.01.2019 சனிக்கிழமை ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு 04.01.2019 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேய ஹோமமும், 05.01.2019 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை 108 கலச மூலிகை தேன் திருமஞ்சனமும், 1008 வடைமாலை, துளசிமாலை, வெண்ணை சாற்றும் வைபவமும், 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை துளசி தீர்த்த திருமஞ்சனமும், 1008 புஷ்பங்களால் மஹா அர்ச்சனையும், செந்தூரம் சாற்றும் வைபவமும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஹனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்வாமிகளின் ஆசியுடன் கீழ்கண்ட பலன்களுக்காக மூன்று நாட்கள் வைபவமாக நடைபெற உள்ளது.

தனாகர்ஷணம் பெறவும், கல்வியில் மேன்மையும்,  செல்வ வளம் பெற்றிடவும், மன வலிமையும் தைரியமும் கிடைத்து வாழ்க்கையில் வெற்றி பெறவும், சவால்களை வென்று இலட்சியத்தை அடைந்திடவும், தொழில் மேன்மையும், அரசியல் வெற்றியும், உயர்பதவி பெற்றிடவும், மன பயங்கள் அகலவும், ஜாதகத்தில் உள்ள சகலவித சனி கிரக தோஷங்களும் நவக்கிரக தோஷங்களும் விலகிடவும் ஹனுமத் ஜெயந்தியில் நடைபெறும் வைபவங்களில் பங்கேற்று ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயரின் அருள் பெற்று மன தைரியத்துடன் வாழ மேற்கண்ட வைபவங்கள் பலன் தரும்.

108 மூலிகை தேன் கொண்ட கலசங்களால் திருமஞ்சனம் :

ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 10 ஆயிரம் மைல்கள் கரிக்கோலமாக வந்து, பக்தர்கள் கைப்படை எழுதிய 10 கோடி தன்வந்திரி மஹா மந்திரங்களை கொண்டு அமைந்துள்ள 9 அடி உயரமுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு ஹனுமத் ஜெயந்தியன்று 108 கலசங்களில் மூலிகை தேன் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. தேனில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது அனைவரும் அரிந்ததே. அத்தகைய சிறப்புமிக்க  திரவியமான தேன் கொண்டு நடைபெறும் திருமஞ்சனத்தில் கலந்து கொள்வதன் மூலம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷத்தினை பெறுவதோடு, தனாகர்ஷணம் பெற்று செல்வச்செழிப்பை அடைந்திடலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். பங்கேற்கும் அனைவரும் தேன் பிரசாதத்தை ஔஷதமாக பெற்று ஆரோக்யத்துடன் லக்ஷ்மி கடாட்சமும் மஹா சரஸ்வதியின் அருளும் ஒருங்கே கிடைக்கப் பெறலாம். ஆகவே இந்த திருமஞ்சனத்தில் பங்கு பெற்று கல்விச் செல்வமும் தனாகர்ஷணமும், பெற்று வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து வித தோஷங்களில் இருந்தும் விடுபடுங்கள்.

9 அடி உயர ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் 9 படிகளில் உள்ள 9 விதமான ஆஞ்சநேயரின் தரிசனமும், அருளும் பெற்று ஆரோக்யத்துடன் சகல செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ ஸ்ரீ சீதாலக்ஷ்மி சமேத ராம பிரான் அருளுடன் பக்த ஹனுமானின் ஆசியோடும் குருவருளையும் பெற்றிடுங்கள். இந்த பூஜைக்கு தேவையான தேன், துளசி மாலை, பழமாலை, பூமாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சம்பழம் மாலை, தேங்காய், வெண்ணெய், செந்தூரம் மற்றும் பூஜைக்கான சாமான்கள், அன்னதானத்திற்கான மளிகை பொருட்கள் அளித்து இவ்விழாவில் பங்குபெற்று ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் பரிபூரண அருளுடன் குருவருளும் பெற்றிட வாருங்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203



No comments:

Post a Comment