வாலாஜா
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்காஞ்சி
மஹாபெரியவரின் ஆராதனை விழாகாலபைரவர்
கோடி ஜப ஹோமம் மற்றும்ஆரோக்யம், ஐஸ்வர்யம் தரும் 58 யாகங்கள்
கோபூஜையுடன்
கோலாகலமாக துவங்கியது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர்
முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று 03.01.2019 வியாழக்கிழமை
காலை 6.00 மணிக்கு மங்கள வாத்யத்துடன் கோபூஜை, திருப்பாவை, திருவெம்பாவை, வேத
பாராயணம், ஸ்ரீ விநாயகர் தன்வந்திரி திருமஞ்சனம், மஹா கணபதி ஹோமம், மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீ காலபைரவர் கோடி ஜப ஹோமம், காஞ்சி மஹாபெரியவர் ஆராதனையுடன்
காலபைரவர் கோடி ஜப ஹோமம் மற்றும் ஆரோக்யம், ஐஸ்வர்யம் தரும்
58 யாகங்களின் பூர்வாங்க பூஜைகள் கோலாஹலமாக துவங்கியது.
இந்த
யாகமானது இன்று 03.01.2019 வியாழக்கிழமை
முதல் தினம் ஒரு யாகத்துடன் கோடி ஜப காலபைரவர் ஹோமம் வருகிற 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை வரை 58 நாட்கள் 58 யாகங்கள்,
ஆரோக்யம்,
ஐஸ்வர்யம் தரும் யாகங்களாக சிறப்பு பூஜைகளுடன் நடைபெற உள்ளது.
பக்தர்கள் அனைவரும் தினசரி காலை முதல் மாலை வரை நடைபெறும் மேற்கண்ட யாகத்தில்
கலந்து கொண்டு திருவருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment