வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்புஷ்ப யாகத்துடன் 1000 கிலோ மிளகாய் அபிஷேகம்.
புஷ்ப யாகம்.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்,
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை
ஞானகுரு”
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞைபடி உலக நலன் கருதி
இன்று 23.09.2017 புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை
காலை மக்களின் உடல் பிணி, உள்ளத்து
பிணி நீங்க மூலவர் தன்வந்திரி
பெருமாளுக்கு மல்லி, சாமந்தி, துளசி,
ரோஜா, மருதம், தவனம் போன்ற
பலவித மலர்களால் ஸஹஸ்ர நாம அர்ச்சனையுடன்
சூக்த பாராயணங்களூடன் புஷ்ப யாகம் நடைபெற்றது.
1000 கிலோ சிகப்பு மிளகாய் அபிஷேகம்.
தொடர்ந்து
நவகிரக தோஷங்கள் அகலவும், பயங்கள் விலகவும் செய்வினை
கோளாறுகள், பலவகயான தோஷங்கள் நீங்கவும்,
குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி
நடைபெற ஸ்ரீ ஐஸ்வரிய ப்ரத்யங்கிரா
தேவிக்கு 1000 கிலோ சிகப்பு மிளகாய்
கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஸ்ரீ சஞ்சீவி அஞ்சநேயருக்கு
விசேஷ பஞ்சதிரவிய மஹா அபிஷேகமும் நடைபெற்றது.
( இன்று முதல் வருகிற 15.10.2017 வரை
ஸ்ரீ ஐஸ்வரிய ப்ரத்யங்கிரா தேவிக்கு
1000 கிலோ சிகப்பு மிளகாய் கொண்டு
சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது ).
1008 கலசங்களில் வில்வ தீரத்தாபிஷேகம்.
மேலும்
நாளை ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில்
பலவகையான தோஷங்கள் நீங்கி ஆயுள் ஆரோக்யம்
பெறவும், நரம்பு சம்பந்தமான நோய்கள்
அகலவும் 1008 கலசங்கள் கொண்டு லகு ருத்ர
ஹோமத்துடன் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத
ஸ்ரீ மரகதேஸ்வரருக்கு ருதர ஜப பாராயணத்துடன்
வில்வ தீரத்தாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தகவலை ஸ்ரீ
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment