தன்வந்திரி பீடத்தில் வருகிற 05.10.2017 பௌர்ணமியில் கால தோஷத்தால் தடுமாறும் தம்பதிகளுக்கு மண வாழ்க்கையை தரும் வாழை பூ பூஜை
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பெற்றோர்கள் மற்றும் உற்றோர்கள் ஆசியுடன் ஒரு மனைவியோடு வாழவேண்டும். இதுவே நல்ல குடும்பத்திற்கு அழகு என்பர். ஒருசிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மறுமணம் முடித்து அவதிகுக்குள்ளாகி வருகிறார்கள். பெண் ணின் உறவினர்கள் நீதிமன்றம், கட்டப் பஞ்சாயத்து, மகளிர் காவல் நிலையம் என்று பல இடங்களில் அலைய நேரிடுகிறது.. கணவர் வேறு தாரத்தோடு வாழச் சென்றுவிட்டால், முதல் மனைவி யின் வாழ்க்கை சூன்னியமாகி வருமானம், பாதுகாப்பு இல்லாமையால், குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதெல்லாம் சமுதாயத்தில் சகஜம் என்று சிலர் சொல்வார்கள். பெண் கொடுக்கும்போதே மண மகனுக்கு இருதார தோஷம் ஆராய்ந்து பின்னர் பெண்ணைக் கொடுக்க வேண்டும்.என்பர்,
ஒருவரின்
ஜாதகத்தில் லக்னத்துக்கு 7,8 ஆம் வீட்டிற்குரிய கிரகம்
பாவியானாலும் அல்லது பாவ கிரகங்களின்
பார்வை பெற்றிருந்தாலும் அவர் இருதார தோஷம் உள்ளவர். அல்லது
12 ஆம் வீட்டில் குரு பகவான் செவ்வாயுடன்
கூடினாலும் 2, 7-க்குடைய கிரகம் ஏதேனும்
ஒன்று பாப கிரகமாக இருந்தாலும்,
அந்த ராசியில் பாவ கிரகம் இருந்தாலும்
7 ஆம் வீட்டிற்குரியவர்
பாவ கிரகத்துடன் கூடி இரண்டால் வீட்டில்
இருக்க, அந்த கிரகத்தைச் செவ்வாய்
பகவான் பார்த்தாலும்,8ம் இடத்துக்குரியவர் 7ம் இடத்தில் அமர்ந்தால் திருமணம் என்பது
ஒரு கேள்விக்குரியில் முடிகிறது. என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
அந்த ஜாதகர் இரு தார தோஷம் உள்ளவர் என்பதை அறிந்து கொள்ளலாம். மேற்கண்டவாறு உள்ள தார தோஷத்தில் பிறந்தவருக்கு ஒரு சிலபெற்றோர்கள் அறியாமையால் திருமணம் நடந்தால் போதும் என்று திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதுவும் ஒரு வகையில் காலசக்கரத்தின் திருவிளையாடல் என்கின்றனர். இனி வரும் காலங்களில் பெற்றோர்கள் ஆண், பெண் திருமணத்திற்கு முன்பே உரிய ஜோதிடரிடம் இரு தார தோஷம் அறிந்து ஆலோசனை பெற்று உரிய எளிய பரிகாரம் செய்து, தோஷங்களிலிருந்து, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கணவனோடு மனைவியும், மனைவியோடு கணவனும் ,சேர்ந்து வாழவும், அல்லது புதிய பாதையில் திருமண பந்தத்தை அமைத்துக் கொள்ளவும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 05.10.2017 வியாழக் கிழமை ரேவதி நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் இரு வேளையும் பக்தர்கள் பங்கேற்று பலனடைய வேண்டி மேற்கண்ட தார தோஷங்கள் விலகவும் ,ஆண், பெண் திருமணப் பிராப்தி ஏற்படவும், சாபங்கள் விலகவும், களத்திர தோஷம் நீங்கவும், துர்மரணத்தால் வீட்டில் நிகழும் அசம்பாவிதங்கள், அசௌகர்ய நிகழ்வுகள் காரிய தடைகள் நிவர்த்தி பெற்றிடவும், கர்ம வினைகளால் தொடரும் தோஷதடைகள் வீட்டில் ஏற்படும் குழப்பங்கள் விதண்டா வாதங்கள் நிவர்தி பெற்று ,சகல சௌபாக்யம் பெற்றிட சித்தர்கள் அருளிய வாழைப்பூ காலசக்கர பூஜையுடன், நவகன்னியருக்கு சிறப்பு அபிஷேகமும் ,அலங்காரத்துடன் கன்யா பூஜை, தம்பதி பூஜை சுமங்கலி பூஜையும் நடைபெற்று பங்குபெரும் நபருக்கு கலசாபிஷேகம் செய்து தடைகள் நீங்கவும் திருஷ்டிகள் விலக ஏற்ற இறக்க தீப பூஜை நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா,
கீழ்புதுப்பேட்டை வாலாஜாபேட்டை.632513
போன். 04172-230033,23274
www danvantripeedam@gmail. Danvantritemple.org
No comments:
Post a Comment