வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும், உலகத்தில் அனைத்து ஜீவ ராசிகளின் நலனுக்காகவும், சுமங்களிகளின் தீர்காயுள் வேண்டியும், லஷ்மி, சரஸ்வதி , துர்கா தேவியர்களின் அருளாசி பெறவும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் 20.09. 2017 வியாழன் முதல் 30.09.2017 சனிக் கிழமை வரை பத்து நாட்கள் தினமும் காலை 10.00 மணியளவில் பலன் தரும் பதினாறு வகையான ஹோமங்கள் நடைபெற உள்ளது.
தன்வந்திரி ஹோமம், சூலினி துர்கா ஹோமம், சனி சாந்தி ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், கார்த்தவீர்யாஜுனர் ஹோமம், சொர்ண கால பைரவர் ஹோமம், , குபேர லஷ்மி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், சந்தான கோபால ஹோமம், குருதட்சிணாமூர்த்தி ஹோமம், ஆயுள் ஹோமம், த்ருஷ்டி துர்கா ஹோமம் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் ,இராகு கேது ஹோமம் ஆகிய 16 ஹோமங்கள் நடைபெற உள்ளது.
20.09..2017 அமாவாசை முதல் காலை பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கும் இந்த ஹோமங்கள்,30.09. 2017 மாலை பூர்ணாகூதியுடன் நிறைவு பெறும். ஹோமங்களை தொடர்ந்து, அதற்குரிய தெய்வங்களுக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறும்.
இந்த ஹோமத்தில், பலவகையான புஷ்பங்கள், சமித்துக்கள், நெய், சிவப்பு காய்ந்த மிளகாய், பட்டு வஸ்திரங்கள், பல வகையான பழங்கள், பல வகையான இனிப்புகள், கார வகைகள் மற்றும் பல வகையான மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளது. நடக்க இருக்கும் இந்த ஹோமத்தில், பங்கு பெற்று நவராத்திரி நாயகிகளான லஷ்மி, சரஸ்வதி மற்றும் துர்கா தேவியர்களின் அருளுடன் ஸ்ரீஆரோக்ய லஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அனுகிரகத்துடன் பதினாறும் பெற்று நோயின்றி, சீறும், சிறப்புமாக வாழ வேண்டுமாய் கோருகிறோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632513.
Ph. 04172 – 230033 , 230274 (M) 9443330203
Mail: danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment