Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, September 13, 2017

1000 KG Red Chilly Abhishekam at Sri Danvantri Arogya Peedam.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்ரீ ஐஸ்வரிய  ப்ரத்யங்கிரா தேவிக்கு
 அல்லல்கள் தீர 1000 கிலோ மிளகாய் அபிஷேகம்
14.10.2017 சனி மற்றும் 15.10.2017 ஞாயிறு நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  கயிலை ஞானகுரு  டாக்டர்  ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 9 அடி உயரமுள்ள யக்ஞஸ்வரூபிணி ஸ்ரீ ஐஸ்வரிய ப்ரத்யங்கிரா தேவிக்கு சமீபத்தில் 5000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மாபெரும் நிகும்பளா யாகம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்தது. அத்தகய சிறப்புவாய்ந்த பீடத்தில் ஸ்ரீ ஐஸ்வரிய  ப்ரத்யங்கிரா தேவிக்கு உலக நலன் கருதி வருகிற 14.10.2017 சனிக்கிழமை மற்றும்  15.10.2017 ஞாயிற்று கிழமை ஆகிய இரண்டு நாட்கள் 1000 கிலோ சிகப்பு மிளகாய் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த மிளகாய் வற்றல் அதிகம் இடம் பெறுவதற்கான காரணம்  உலக மக்களின் செய்வினை, பில்லி, சூன்யம், சுமங்கலி  சாபம், கன்னி  சாபம், குரு சாபம், பிராமண சாபம், ஊழ்வினை, மாந்த்ரிகம், தாந்த்ரிகம், காத்து, கருப்பு, சமராகு, ராகுதசை, ராகுபுக்தி, சனிதசை, சனிபுக்தி, அஷ்டம சனி, ஏழரை சனி, ஜென்ம சனி போன்றவைகளால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மேலும் பல தோஷங்கள் நீங்கவும், திருமணம், குழந்தை, தொழில், உத்யோகம், வியாபாரம், வழக்கு, கணவன் மனைவி ஒற்றுமை மற்றும் இராஜாங்க பதவி மற்றும் சகல ஐஸ்வரியமும்  கிடைக்க ஸ்ரீ ஐஸ்வரிய  ப்ரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ சிகப்பு மிளகாய் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை முன்வைத்து, தங்களின் கரங்களினாலேயே ஸ்ரீ ஐஸ்வரிய  ப்ரத்யங்கிரா தேவிக்கு சிகப்பு மிளகாய் வற்றல் கொண்டு அபிஷேகம் செய்யலாம். இப்படி பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும் வகையில் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறக்கூடிய இந்த ஹோமங்களில். பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் பிரார்த்திக்கின்றோம்.

குறிப்பு : 1000 கிலோ மிளகாய் வற்றல் அபிஷேகதிற்கு கைங்கர்யமாக மிளகாய்வற்றல் வாங்கிக்கொடுக்க விரும்புபவர்களும், இந்த பூஜையில் குடும்பத்தினருடன் பங்குபெற விரும்புபவர்களும் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203

No comments:

Post a Comment