30.09.2017 முதல் 02.10.2017 வரை,
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்குஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற1008 இளநீர் அபிஷேகம் நடைபெறுகிறது.
"புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு" என்பது திருமுறை.
மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் வழிபாடு
செய்வது இன்றியமையாதது. வீடுகளில் செய்யப் பெறுவது ஆத்மார்த்த
வழிபாடு. திருக்கோயில்களில் நிகழ்த்தப் பெறுவது பரார்த்த வழிபாடு.
இவ்விரண்டிலும் இறைவன் திருவுருவங்களுக்கு அபிஷேகம்,
அர்ச்சனை முதலியன நிகழும்.
உலக மக்களின்
விருப்பங்கள் நிறைவேறவும்,
சுகத்தை பெறவும், பாவத்தைப் போக்கவும், உடல் திடம் பெறவும். யம பயத்தைப் போக்கவும்
நன்மக்களைப் பெறவும்.
கடன் தொல்லை நீங்கி நல்வாழ்வு
பெறவும்,
ஆரோக்கியம். சுகம். செல்வப் பெருக்கு
பயிர்கள் வளர்ச்சி பெறவும், கோபத்தைப் போக்கி சாந்தத்தை பெறவும், ஒழுக்கத்தை
பெறவும். பயம், பகை அகன்று போகங்களை பெறவும். அரச
வாழ்வு. இலட்சுமி கடாட்சம் கிடைக்கவும் தீர்க்க ஆயுள்
கிடைக்கவும்.மன துக்கம் நீங்கவும், இனிய
கானம் பாடும் திறமையும், குயிலினும்
இனிய குரலும் கிடைக்கவும். அஞ்ஞானம்
நீங்கிவிடும். வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு
பெற்று பேரானந்தம் பெறவும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞைபடி புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டும்
விஜயதசமியை முன்னிட்டும், திருவோணம், ஏகாதசி, த்வாதசி, காந்தி ஜயந்தி
ஆகிய சிறப்புகள் நிறைந்த நாட்களான புரட்டாசி மாதம் 14 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை
30.09.2017 மற்றும்
01.10.2017 ஞாயிற்று
கிழமை, 2.10.2017 திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி
வரை தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள 9 அடி
மூலவருக்கு மேற்கண்ட பலன்களுடன் ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற 1008
இளநீர்கள் மற்றும் நல்லெண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, பஞ்சகவ்யம்,
பஞ்சாமிருதம்,
பால்,
தயிர்,
நெய்,
தேன்
கரும்பின்
சாறு,
பழவர்க்கம்,
வாசனைச்
சந்தனம்
சிருங்கநீர்,
தாராநீர்,
ஸ்நபனநீர்,
சங்காபிஷேகம்
ஆகியனவற்றை கொண்டு வரிசையாக மஹாபிஷேகம்
நடைபெறவுள்ளது. இந்த தகவலை
ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033
/ 09443330203
வங்கி விவரங்கள்:
Name : Sri
Muralidhara Swamigal
Bank Name : State
Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFC: SBIN0000775
No comments:
Post a Comment