தன்வந்திரி பீடத்தில்
அஷ்ட லஷ்மி யாகத்துடன்
ஆரோக்ய லஷ்மி ஹோமம் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 30.09.2017 சனிக்
கிழமை காலை 10.30 மணிக்கு வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும் பெற
வேண்டி அஷ்டலட்சுமி, குபேர லக்ஷ்மி யாகமும் ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நவராத்திரி மற்றும்
விஜயதசமியை முன்னிட்டு மக்கள் ஐஸ்வர்யம் ஆனந்தம் ஆரோக்யம், பெற வேண்டி நடைபெற்றது.
தீராத நோய்கள் எல்லாம் தீரும், பசிப்பிணி நீங்கும். தானியங்களின் விளைச்சல் அதிகம்பெறலாம். வயிறு சம்பந்தமான பிணி
நீங்கும் காரியங்களில் வெற்றி, மனோதைரியம் குழந்தைப்
பேறு, அனைத்து காரியங்களில் வெற்றி, தெய்வீக அருள் கிடைக்கும், கல்வியும் வளரும்,
செல்வமும் வளரும். வாழ்க்கையில் சௌபாக்கியங்களும்
பெற்று ஆரோக்யம்,ஆனந்தம் ஜஸ்வர்யத்துடன் வாழலாம்.
என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் மேற்கண்ட யாகத்திலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற
அபிஷேகத்திலும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து நாளை மதியம்
3.00 மணிக்கு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், மஹா சுதர்சனர், ஸ்ரீ சத்யநராயணர் யாகமும் நவ
கலச திருமஞ்சனமும் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment