ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வருகிற 01.10.2017 ஞாயிற்று கிழமை
ருண - ரோக -
சத்ரு தொல்லை நீக்கும்
ஸ்ரீ லக்ஷ்மி
நரசிம்மர் ஹோமம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 01.10.2017
ஞாயிற்று கிழமை மாலை 3.00 மணி முதல் இரவு
7.00 மணி வரை, புரட்டாசி திருவோண நக்ஷத்திரம்
மற்றும் ஏகாதசி திதியை முன்னிட்டு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் லட்ச ஜப பாராணத்துடன்
நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவ கலச திருமஞ்சனமும் நடைபெறும்.
ருண ரோக சத்ரு நாசினியான ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் சிறப்பு:
வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு
தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், உக்ரமும் கோரமும் உடைய
கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், பக்தனான ப்ரஹலாதனுக்கு
அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை
சம்ஹரித்த வரும்,மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும்
பயத்தை போக்கடிப்பவரும் ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம்,
தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும் மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு,
தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், தேவதைகளின் காரியத்தை
ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான
ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை வணங்கி அருள்பெற மேற்கண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் யாகமும் சிறப்பு
வழிபாடும் புஷ்பார்ச்சனையும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203
No comments:
Post a Comment