ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
நாளை நவதுர்கா ஹோமம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டும் பெண்கள் சௌபாக்கியங்கள் பெற்று
தீர்க சுமங்கலிகளாக வாழவேண்டி நாளை 28.09.2017 வியாழக்கிழமை
வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு
நவதுர்கா ஹோமமும், ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு
சிறப்பு அபிஷேகமும் நடைபெறவுள்ளது.
நவதுர்கைகள் யார் யார் :
சமசுகிருதத்தில்
'நவ' என்றால் ஒன்பது என
பொருள்படும். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக்
கூறுகின்றன.
சைலபுத்ரி, பிரமசாரிணி,
சந்திரகாண்டா,
கூஷ்மாண்டா,
ஸ்கந்தமாதா,
காத்யாயினி,
காளராத்திரி,
மகாகௌரி,
சித்திதாத்திரி
என அன்னை ஒன்பது வடிவம்
கொண்டிருக்கிறாள்.
இந்த ஒன்பது வடிவங்களுக்கும் வட
இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை செய்வர். இந்த
ஒன்பது நாட்களும் அன்னையை முறையாக பூஜை
செய்தால் அவள் அனைத்து நலன்களும்
அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.
துர்க்கையின் வடிவம் எதிரிக்கு அச்சத்தை
ஏற்படுத்தக் கூடியது. இவளின் உடல் மழை
மேகம் போல் கருமை நிறம்
கொண்டது. இவள் நான்கு கரம்
கொண்டவள். ஒரு கரத்தில் வஜ்ராயுதமும்,
மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற
இரு கரங்கள் பக்தருக்கு அபயம்
தரும். அன்னை கழுதை வாகனத்தில்
ஏறி வருபவள். இவளின் பார்வை பட்டாலே
பாவம் தொலையும் என்றும், பேய் பிசாசுகள் பயந்து
ஓடும் என்றும் நம்புகின்றனர். பக்தருக்கு
இவளின் உருவம் பயம் தராது.
பக்தருக்கு நன்மை செய்வதால் இவளை
'சுபங்கரி' என்பர்
துர்கா மந்திரம் :
ஓம் ஹ்ரீம் தும்
துர்க்கே
பகவதி
மநோக்ருஹ மந்மத
மத
ஜிஹ்வாபிஸாசீருத்
ஸாதயோத் ஸாதய
ஹிதத்ருஷ்டி அஹிதத்ருஷ்டி
பரத்ருஷ்டி ஸர்பத்ருஷ்டி
சர்வத்ருஷ்டி விஷம்
நாசய
நாசய
ஹூம் பட் ஸ்வாஹா
நவதுர்கா ஹோம பலன் –
பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும்,
கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும்
தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு
- பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட
சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும்,
விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும்,
திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது.
இந்த நவதுர்கா ஹோமத்தில்
சிறப்பு திரவியங்கள் சேர்க்கபடவுள்ளனர். இந்த தகவலை ஸ்ரீ
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033
/ 09443330203
No comments:
Post a Comment