Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, September 30, 2017

அஷ்ட லஷ்மி யாகம் ஆரோக்ய லஷ்மி ஹோமம்

தன்வந்திரி பீடத்தில்
அஷ்ட லஷ்மி யாகத்துடன்
ஆரோக்ய லஷ்மி ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 30.09.2017 சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும்  பெற வேண்டி அஷ்டலட்சுமி, குபேர லக்ஷ்மி யாகமும் ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நவராத்திரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மக்கள் ஐஸ்வர்யம் ஆனந்தம் ஆரோக்யம், பெற வேண்டி நடைபெற்றது.


தீராத நோய்கள் எல்லாம் தீரும், பசிப்பிணி நீங்கும். தானியங்களின் விளைச்சல் அதிகம்பெறலாம். வயிறு சம்பந்தமான பிணி நீங்கும் காரியங்களில் வெற்றி, மனோதைரியம் குழந்தைப் பேறு, அனைத்து காரியங்களில் வெற்றி, தெய்வீக அருள் கிடைக்கும், கல்வியும் வளரும், செல்வமும் வளரும். வாழ்க்கையில் சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்யம்,ஆனந்தம் ஜஸ்வர்யத்துடன் வாழலாம். என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் மேற்கண்ட யாகத்திலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து நாளை மதியம் 3.00 மணிக்கு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், மஹா சுதர்சனர், ஸ்ரீ சத்யநராயணர் யாகமும் நவ கலச திருமஞ்சனமும் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







Friday, September 29, 2017

ஞான சரஸ்வதி மஹா யாகம்

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஞான சரஸ்வதி மஹா யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மாணவ மாணவியர்களின் கல்வித்தரம் உயரவேண்டியும், ஞானத்தின் பிறப்பிடமான கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் அருள்பெற இன்று 29.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மஹா சரஸ்வதி யாகம் நடைபெற்றது.

கல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் தேவையானதுதான். இவ்வுலகத்திற்கு வேண்டிய அறிவையும், அவ்வுலகத்திற்குத் தேவையான ஞானத்தையும் அளிப்பவள் சரஸ்வதி.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற மஹாசரஸ்வதி யாகத்திலும் சிறப்பு அபிஷேகத்திலும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், நடுநிலையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் பங்கேற்று பலன் பெற்றனர். சரஸ்வதியின் பாதங்களிலும் யாகத்திலும் வைத்து பூஜித்த எழுது பொருட்களான நோட்டு புத்தகம், பேனாக்களை ஸ்வாமிகள் திருக்கரங்களால் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிலை உயர்வதற்கு அருட்பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











நவதுர்கா ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

"நவதுர்கா ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்" Thanks to 'DINAMANI, THINABOOMI, SAKSHI, ANDHRA JYOTHI' daily news papers 29.09.2017





ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி - ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அவதார தினம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வருகிற 17.10.2017 முதல் 20.10.2017 வரை
ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழாவும்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அவதார தினமும்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 17.10.2017 செவ்வாய்க்கிழமை திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி, உலக ஆயுர்வேத தினம் மற்றும் 18.10.2017 புதன் கிழமை மாதாந்திர சிவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் 19.10.2017 வியாழக்கிழமை ஐப்பசி அமாவாசை மற்றும் 20.10.2017 வெள்ளிக்கிழமை கந்த ஷஷ்டி மற்றும் ஸ்வாமிகளின் 58-ம் ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள், அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகள் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி பீடம், ஒரு வாழ்வியல் மையம் :

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து முதலில் தோன்றியவர் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்தவர் தன்வந்திரி பகவானுக்கு என்று தனிக்கோவில் வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் உள்ளது. இங்கு வாழ்வியல் முறைகளை விளக்கும் விதமாக மூலிகை ஆராய்ச்சி, வானிலை ஆராய்ச்சி, ஜோதிட ஆராய்ச்சி, வேத ஆகமங்கள் ஆராய்ச்சி, அறிவியல், சமூகம், கலை, பண்பாடு, சமயம், பாரம்பரிய சம்பிரதாயங்களை பலரும் அறிந்து தெரிந்து பயன்பெறும் விதத்திலும், வாழ்வியல் முறையில் பல உண்மைகளை தெரிந்து கொள்ளும் விதத்தில் உலக வாழ்வியல் மையமாக அமையப்பெற்றுள்ளது.

உலக   தரச்சான்றிதழ்கள் பெற்றுள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடம் :

சுற்றுச்சூழலுக்காக .எஸ்.. 14001, .எஸ்.. 9001-2008 ஆகிய உலக   தரச்சான்றிதழ் பெற்ற பெருமையும் இந்த பீடத்திற்கு உண்டு.

ஸ்ரீ தன்வந்திரி பீடமும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளும்:

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் நிறுவனர் முரளிதர சுவாமிகள். இவர் தன் தாய்க்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கடந்த 1995-ம் ஆண்டு ஸ்ரீமாருதியின் உதவிக்கரங்கள் என்ற அமைப்பை உருவாக்கினார். பெற்றோர்களை குருவாக ஏற்று ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியான கயிலை ஞானகுரு டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  75 சன்னதிகள், சிவலிங்கரூபமாக 468 சித்தர்கள், மற்றும் பெற்றோர்களுக்கும் ஆலயம் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். குரு பீடமாக  பக்தர்களால் போற்றும் விதத்தில் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்துள்ளார். இப்பீடம் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் இருந்து  மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மந்திரமே யந்திரம் :

கலி காலத்தில் அழியாமல் இருக்க ஐம்பத்திநான்கு கோடி தன்வந்திரி மஹா மந்திர ஒலிகளுடன் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்த பீடம் ஒளஷத பீடமாக அமைந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள்  என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என்பதாகும்.

468 சித்தர்கள் ஸ்தலம்:

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், சித்தர்கள் ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் எட்டு திக்குகளிலும் திரு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி 9 அடி உயரத்தில் 46 லட்சம் பக்தர்கள் கைபட எழுதிய 54 கோடி தன்வந்திரி மந்திரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார். ஷண்மதங்களுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

இத்தலத்தில் உள்ள இறைவன் இரண்டு லட்சம் கிலோ மீட்டர் கரிக்கோலம் வந்து 63 திவ்ய தேச பெருமாளின் அபிமானத்தை பெற்றவர். மருத்துவ அவதாரம் என்பதால் பிணி தீர்க்கும் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். சக்ர பீடம், யந்திர பீடம், மந்திர பீடம், சஞ்சிவி பீடம், யக்ஞ பீடம், சித்தர்கள் பீடம், துர்கா பீடம், காயத்ரி பீடம் என்று பல பெயர்களில் பக்தர்கள் இப்பீடத்தை அழைப்பதுண்டு. ஸ்ரீ தட்சிணா மூர்த்தி குருபகவான் தன்வந்திரி ஆலயத்தில் வல்லலார், இராகவேந்திரர், காஞ்சி மஹா பெரியவர், சீரடி சாயிபாபா இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

தன்வந்திரி ஜெயந்தியும் ஸ்வாமிகள் அவதார தினமும் :

இந்த பீடத்தில் ஆண்டுதோறும் தன்வந்திரி ஜெயந்தி விழாவும் ஸ்வாமிகளின் அவதார தினமும் ஒன்றாக வருவது மிகவும் சிறப்பு. என்பதால், இந்த நாட்களில் ஹோமங்களும், பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருவது பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள தன்வந்திரியை வழிபாடு செய்தால் ஆரோக்யத்துடன்  கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆண்டு வருகிற 17.10.2017 செவ்வாய்க்கிழமை திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி, உலக ஆயுர்வேத தினம் மற்றும் 18.10.2017 புதன் கிழமை மாதாந்திர சிவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் 19.10.2017 வியாழக்கிழமை ஐப்பசி அமாவாசை மற்றும் 20.10.2017 வெள்ளிக்கிழமை கந்த ஷஷ்டி மற்றும் ஸ்வாமிகளின் 58-ம் ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள், அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகள் நடைபெறவுள்ளது.

தன்வந்திரியின் சிறப்புகள் :

தன்வந்திரி பெருமாள் மகா விஷ்ணுவின் அம்சம். பன்னிரு கரங்களில் சங்கு சக்கரத்தை, ஒரு கரத்தில் அமிர்த்த கலசம், மற்றொரு கரத்தில் சீந்தலைக் கொடியுடன் காட்சி அளிக்கின்றார். அக்காலத்தில் மருத்துவ முறையில் நோயை உடலில் இருந்து விரட்ட, கெட்ட ரத்தத்தை உறுஞ்சி எடுத்து, நோயை குணமாக்க அட்டை பூச்சிகளை பயன் படுத்தினர். இப்போதும், இந்த முறையை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால்தான், தன்வந்திரி விக்கிரகத்தில் அட்டை பூச்சி இடம் பெற்றுள்ளது.

தன்வந்திரியும் தன்வந்திரி ஜெயந்தியும் :

தன்வந்திரி அவதார தினத்தையொட்டி இப் பீடத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஸ்ரீ தன்வந்திரி சன்னதி முன்பு பக்த்தர்கள் தன்வந்திரி மஹாமந்திரத்தை உச்சரித்து கொண்டு நெய், வெள்ளம், சுக்கு, மிளகு, திப்பிலி, அரிசி மாவு கொண்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் தன்வந்திரி லேகியத்தை தயாரித்து தன்வந்திரிக்கு நிவேதனம் செய்து தீபாவளியன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.

அமைவிடம்:

வேலூரில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் கீழ்புதுபேட்டை என்னும் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது. வேலூரில்  இருந்து திருத்தணி-திருப்பதி செல்லும் சாலையில் தலங்கை கிராஸ் என்ற பகுதியில் இருந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு சாலை பிரிந்து செல்கிறது. வாலாஜாபேட்டையிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம்

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வருகிற 01.10.2017 ஞாயிற்று கிழமை
ருண - ரோக - சத்ரு தொல்லை நீக்கும்
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 01.10.2017 ஞாயிற்று கிழமை மாலை 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை, புரட்டாசி திருவோண நக்ஷத்திரம் மற்றும் ஏகாதசி திதியை முன்னிட்டு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் லட்ச ஜப பாராணத்துடன் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவ கலச திருமஞ்சனமும் நடைபெறும்.

ருண ரோக சத்ரு நாசினியான ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் சிறப்பு:

வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த வரும்,மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும் ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும் மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை வணங்கி அருள்பெற மேற்கண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் யாகமும் சிறப்பு வழிபாடும் புஷ்பார்ச்சனையும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


Thursday, September 28, 2017

நவதுர்கா ஹோமம்

ஸ்ரீ  தன்வந்திரி  பீடத்தில்
நவதுர்கா  ஹோமம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரியை முன்னிட்டும் பெண்கள் சௌபாக்கியங்கள் பெற்று தீர்க சுமங்கலிகளாக வாழவேண்டி இன்று 28.09.2017 வியாழக்கிழமை வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு நவதுர்கா ஹோமமும், ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகமும். நடைபெற்றது

சமசுகிருதத்தில் 'நவ' என்றால் ஒன்பது என பொருள்படும். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.

இந்த யாகத்தில் பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள்,மாத்ரு-பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நவதுர்கா  ஹோமத்தில் சிறப்பு திரவியங்கள் சேர்க்கபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.