Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, April 30, 2017

Special Events and Homams From 12.05.2017-18.05.2017 at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்அருள் தரும் அற்புத ஹோமங்கள்.



ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன்  வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 12.05.2017 வெள்ளிக் கிழமை முதல் 18.05.2017 வியாழக்கிழமை வரை உலக நலன் கருதி அருள் தரும் அற்புத ஹோமங்களும் மஹா அபிஷேகமும் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

12.05.2017 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணி வரை பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபார்வதி  யாகத்துடன் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரிக்கு மஹா அபிஷேகம். நடைபெற்று பங்கேற்கும் பெண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.

ஹோமத்தில் பங்கேற்க  நபர் ஒருவருக்கு காணிக்கை ரூபாய் .2200/-மட்டும்.

12.05.2017 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணி வரை ஆண்கள் திருமணத் தடை நீங்க இந்திராட்சி ஹோமத்துடன் ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்று பங்கேற்கும் ஆண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.

ஹோமத்தில் பங்கேற்க  நபர் ஒருவருக்கு காணிக்கை ரூபாய் .2200/-மட்டும்

12.05.2017 வெள்ளிக் கிழமை சுக்ரகிரக தோஷம் அகலவும் சாபங்கள் நீங்கவும் ஸ்ரீ ரங்கநாதர் ஹோமமும் ஸ்ரீ ரங்கநாதருக்கு அபிஷேகமும் தாமரை பூக்களால் அர்ச்சனையும் நடைபெறும்.

ஹோமத்தில் 4 நபர்கள் பங்கேற்க ரூபாய் 1000/-மட்டும்.

12.05.2017 வெள்ளிக் கிழமை தரித்திரங்கள் நீங்கவும் லஷ்மி கடாட்சத்துடன் குபேர சம்பத்து கிடைக்கவும் கிரக பீடைகள் அகலவும் ஸ்ரீ லஷ்மி குபேர ஹோமத்துடன் 6 அடி உயரமுள்ள ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு பால் அபிஷேகமும் சொர்ண புஷ்ப அர்ச்சனையும் நடைபெறும்

ஹோமத்தில் 4 நபர்கள் பங்கேற்க ரூபாய் 1000/-மட்டும்.

13.05.2017 சனிக் கிழமை ஆயுள் தோஷம் நீங்கவும் ஆயுள் பலம் கூடவும் சனிகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் சனிதிசை, சனிபுக்தி, சனி அந்திரம்,மற்றும் சனி பெயர்ச்சியால் ஏற்படும் தடைகள் அகலவும்  71/2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜென்ம சனி,போன்றவைகளால் ஏற்படும் தீமைகள் குறையவும் சனிசாந்தி ஹோமத்துடன் ஆயுஷ் ஹோமம் நடைபெற்று 9 அடி உயரமுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் 1 அடி உயரமுள்ள சிக்கல் தீர்க்கும் செந்தூர ஆஞ்சநேயருக்கும் மஹா அபிஷேகம் நடைபெறும்.

ஹோமத்தில் ஒரு நபர் பங்கேற்க ரூபாய் 2200/-மட்டும்.


14.05.2017 ஞாயுற்றுக் கிழமை  அனைத்து விதமான சாபங்கள் நீங்கவும் மஹா லஷ்மி கடாட்சம் கிடைக்கவும் காலை 6.30 மணியளவில் கோபூஜை பின்னர் குலதெய்வ தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்கி குலதெய்வ அருள் பெற்று குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்பட காலை 8.00 மணிக்கு ஸ்ரீ பால் முனீஸ்வர்ருக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். இதனை தொடர்ந்து இழந்த பொருட்கள் மீண்டும் பெறவும் இராஜாங்க தோஷங்கள் அகலவும் உத்தியோகம் வியாபாரம் தொழில் போன்றவைகளில் ஏற்படும் நஷ்டங்கள் விலகவும் காணாமல் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கவும். திருட்டு பயம் அகலவும் காவல் தெய்வங்களின் கருணை கிடைக்கவும் காலை 9.00 மணிக்கு  4 அடி உயரமுள்ள பச்சை நிறத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜீனருக்கு மஹா அபிஷேகமும் இரட்சாபந்தனமும் நடைபெறும். அன்றைய தினமே காலை மாணவ மாணவியருக்கு மருத்துவ  அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து சிறந்த மருத்துவராக வேண்டியும் மருத்துவ மனைகள் நல்ல முறையில் இயங்கவும் மருத்துவர்களும் மருத்துவ துறை சார்ந்தவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்படவும் பொருளாதர தடை,ஆரோக்ய தடை நீங்கவும் மக்களின் உடல் ரீதியான நோய்கள், மனரீதியான நோய்கள் அகலவும் ஆட்கொல்லி,உயிர் கொல்லி நோய்களான புற்று நோய் இருதய நோய் சர்க்கரை நோய் சிறுநீரக கோளாறு மூளைக் காய்ச்சல் போன்ற பல்வேறு வகையான நோய்களிலிருந்து மக்கள் விடுபடவும் காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை மஹா தன்வந்திரி ஹோமம் நடைபெற்று ஸ்ரீ ஆரோக்ய லஷ்மிக்கும் 9 அடி உயரமுள்ள மூலவர்  ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகத்துடன் மூலிகை தீர்த்தாபிஷேகம் நடைபெற்று தைல பிரசாதம் வழங்கப்படும்.

மேற்கண்ட அனைத்து பூஜைகளிலும் ஹோமத்திலும் நான்கு நபர்கள் பங்கேற்க ரூபாய் 3000/-மட்டும்.


15.05.2017 திங்கட் கிழமை காலை 10.00 முதல் 12.00 மணிவரை மரண பயம் விலகவும் மாங்கல்ய தோஷம் அகலவும் இயற்கை வளம் பெறவும் நட்சத்திர தோஷங்கள் அகலவும் சந்திர திசை சந்திர புக்தியினால் ஏற்படும் இன்னல்கள் நீங்கவும் மண்வளம் மழைவளம் இயற்கை  வளம் பெற வேண்டியும் விவசாயிகள் நலம் பெறவும் ஸ்ரீ ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் நடைபெறும்.

பூஜைகளிலும் ஹோமத்திலும் நான்கு நபர்கள் பங்கேற்க ரூபாய் 2000/-மட்டும்.


16.05.2017 செவ்வாய் கிழமை காலை 10.00  முதல் 12.00 மணி வரை பஞ்ச பூதம் மற்றும் அஷ்டதிக் பாலகர்களின் கருணையுடன்ஸ்ரீ வாஸ்து பகவான் அருள் பெற்று வீடு நிலம் மனை மண் மற்றும் சௌபாக்கியங்கள் ஏற்படவும் தடைபட்டு வருகின்ற கட்டிட பணிகள் திருப்பணிகள்  விரைவில் நிறைவடையவும் வீடு அலுவலகம் ஆலயங்கள் தொழிற்சாலைகள் வியாபார ஸ்தலங்கள் திருமண மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்க ஸ்ரீ வாஸ்து  சாந்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகமும் நடைபெற்று செங்கல்,மச்ச யந்திரம்,வாஸ்து யந்திரம், பூமி மண்,போன்ற பொருட்கள் பிரசாதஙகள் வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பூமி தோஷங்கள் அகலவும் பூமி தாயின் அருள் பெறவும் தேச நலம் தேக நலம் வேண்டியும் ஸ்ரீ பாரத மாதாவிற்கு மஹா அபிஷேகமும் நடைபெறும். இதனை தொடர்ந்து நவகிரகங்களால் ஏற்படும் தடைகள் அகன்று நன்மைகள் பெறவும் நட்சத்திர தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறவும் நட்சத்திர தேவதைகளின் அருள் பெறவும் தன்வந்திரி பீடத்தல்  காலசக்ர வடிவில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்சங்களுக்கும் 9 நவகிரக விருட்சங்களுக்கும் கால சக்கர பூஜையும் இரட்சாபந்தன வைபவமும் நடைபெறும்.

பூஜைகளிலும் ஹோமத்திலும் நான்கு நபர்கள் பங்கேற்க ரூபாய் 1000/- மட்டும்.

17.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணி வரை குரு அருளுடன் மாணவ மாணவிகள் ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று அவரவர்கள் விருப்ப்ப்படி நல்ல பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து மேற்கல்வி தொடரவும் கல்வு கேள்வி பக்தி, ஞானம், வைராக்கியத்துடன் கலைகளில் தேர்ச்சி பெறவும் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமத்துடன் தன்வந்திரி பீடத்தில் வெளிர்பச்சை நிறத்தில்  4 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவருக்கு பாலாபிஷேகத்துடன் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்று ஏலக்காய் மாலை சாற்றி அர்ச்சனை செய்து எழுது பொருட்கள் வழங்கப்படும்.

பூஜைகளிலும் ஹோமங்களிலும் இரு நபர்கள் பங்கேற்க ரூபாய் 500/- மட்டும்.


இதனை தொடர்ந்து அனைத்து சாபங்கள் தோஷங்கள் நீங்கி தம்பதிகளுக்குள் அன்நோன்யம் ஏற்பட்டு  சந்தான பாக்கியம் பெற தத்த ஹோமம் நடைபெற்று தன்வந்திரி பீடத்தில் பச்சைநிறத்தில் 4 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு பால் அபிஷேகம் செய்து பால்பிரசாதம் வழங்கப்படும்.

பூஜைகளிலும் ஹோமங்களிலும் தம்பதிகள் பங்கேற்க ரூபாய் 1000/- மட்டும்.

18.05.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை  குரு அருள் வேண்டியும் குடும்பத்தில் மகிழ்ச்சி வேண்டியும் சீரடி சாய்பாபா,மஹா அவதார பாபா, மற்றும்  மகாவீர்ருக்கு பால் அபிஷேகமும் கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் மேன்மையடையவும் சத்ரு உபாதைகள் நீங்கவும்  வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும் பஞ்சபட்சி தோஷங்கள் அகலவும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம் மற்றும் ஸ்ரீ சுதர்சன ஹோமம் நடைபெற்று இதனை தொடர்ந்து மஹா அபிஷேக ஆராதனையும் நடைபறும்.


பூஜைகளிலும் நான்கு ஹோமங்களிலும் பங்கேற்க ரூபாய் 1000/- மட்டும்.

No comments:

Post a Comment