தன்வந்திரி பீடத்தில் நாளை சுவாதி
ஹோமம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில் உலகநலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி நாளை 12.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுவாதி ஹோமம் என்கிற ஸ்ரீ லஷ்மி நரசிம்மர்
ஹோமம் நடைபெறுகிறது.
தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே
திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த இந்த
அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை
விரும்பி வணங்குகிறார்கள்.
இந்த யாகத்தில் சுவாதி நட்சத்திரத்தன்று
ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் நல்ல பலனை தரும்
எதிரிகளின் தொல்லை விலகும். மரண பயம் நீங்கும். எதிரிகளை வெல்லும் பலம்
கிடைக்கும். கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை
பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில்
இடைஞ்சல் அகலும். நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
இந்த யாகத்தில் பலவகையான மலர்கள்,
வஸ்திரம்,நெய் தேன்,வெண்கடுகு, வால்மிளகு,சீந்தல்கொடி,மேலும் பலவகையான மூலிகைகளும் சேர்க்கப்பட உள்ளது.மேலும் பால்,தயிர் இளநீர்,மஞ்சள், சந்தனம்,துளசி தீர்த்தம்கொண்டு தன்வந்திரி
பீடத்தல் உள்ளஸ்ரீ கூர்ம லஷ்மி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்று,
பசும்பால் சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், பானகம்போன்ற பிரசாதங்களை நைவேத்தியம்செய்து செவ்வரளி மலர்களாலும் துளசி இதழ்களாலும் சிறப்பு
அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றப்பட உள்ளது.பக்தர்கள்
அனைவரும் இந்த சுவாதி ஹோமத்தில் பங்கேற்று மேற்கண்ட பலன்களை அடைய அழைக்கின்றோம்.
‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில்
நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம்
நரசிம்மரே
No comments:
Post a Comment