வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்...
சித்ரா பவுர்ணமி சிறப்பு
தினத்தில்ஐஸ்வர்யம் அருளும் 1,116 கலசங்களுடன்பிரமாண்ட ஸ்ரீசத்யநாராயண
பூஜை, ஹோமத்துடன் ஸ்ரீமகேஸ்வர
பூஜை
நாள்: 09.05.2017 செவ்வாய்,
10.05.2017 புதன்
வேலூர் மாவட்டம் வாலாஜா நகரத்தில்
சோளிங்கர் செல்லும் சாலையில் அனந்தலை மதுராவில் அமைந்திருக்கிறது ஸ்ரீதன்வந்திரி
ஆரோக்ய பீடம்.
யக்ஞ பூமியாய் திகழும் இந்த புனித
பீடத்தில் இதுவரை பல்லாயிரக்கணக்கான ஹோமங்கள் நடந்துள்ளன. இந்த ஹோமங்களில் கலந்து
கொண்டு ஏராளமானோர் நினைத்த காரியம் கைகூடப் பெற்றனர். இதனால், பலனும் நிம்மதியும் அடைந்துள்ளனர்.
வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய
பீடத்துக்கு ஒரு முறை நேரில் வந்து தரிசித்துச் செல்கிற பக்தர்கள், மீண்டும் மீண்டும் இங்கு நடக்கிற வைபவங்களில் கலந்து கொள்ள வருவதே
இதற்கு சாட்சி!
வருகிற மே மாதம் 9 (செவ்வாய்) மற்றும் 10 (புதன்) ஆகிய இரு
தினங்களில் பிரத்தியேகமான 1,116 கலசங்கள் வைத்து பிரமாண்டமான ஸ்ரீசத்யநாராயண ஹோமம் பூஜை மற்றும்
ஸ்வாமிகளின் குருவான
பெற்றோர்களுக்கு மகேஸ்வர பூஜையும் நடக்க இருக்கிறது.
சித்ரா பவுர்ணமி காலத்தில் நடக்க உள்ள
இந்த ஸ்ரீசத்யநாராயண வழிபாட்டிலும்
மகேஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டால், குரு அருளுடன் அனைத்து ஐஸ்வர்யங்கள் உட்பட எல்லா நலன்களும் பெறலாம் என்று ஆன்மிக
நூல்கள் சொல்கின்றன. பூஜையும் ஹோமங்களும் பூர்த்தி ஆன பின் இந்தக் கலசங்கள்
அனைத்தும் பக்தர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற கொள்கையின் அடிப்படையில் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய
பீடத்தின் ஸ்தாபகர் - கயிலைமாமணி டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இதை ஏற்பாடு
செய்திருக்கிறார்.
இரு நாள் வைபவங்களில் முதல் நாளான மே 9-ஆம்
தேதி காலை ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீநவக்கிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், அன்றைய தினம் மாலை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ள 1,116 கலசங்களுக்கு சிறப்பு பூஜையும் நடக்க உள்ளது.
மறுநாள் 10-ஆம் தேதி காலையில் ஸ்ரீசத்யநாராயண பூஜையும் ஹோமமும்,மதியம் ஸ்வாமிகளின் குருவும் பெற்றோர்களும்
ஆன தந்தை ஸ்ரீமான்
K.B. ஸ்ரீநிவாசன், தாய் ஸ்ரீமதி கோமளவல்லி அவர்களின் திருவுருவ
சிலைகளுக்குமகாஅபிஷேகமும் மகேஸ்வர பூஜையும் மாலையில் ஸ்ரீசத்யநாராயண ஹோமத்தின் மகாபூர்ணாஹுதியும் நடைபெறும். அதன் பின், யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசத்தின் புனிதநீர், ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
பிரத்தியேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீசத்யநாராயணர் விக்கிரகத்துக்கு
திரளான பக்தர்களின் முன்னிலையில் 16 திரவியங்களை
கொண்டு திருமஞ்சனமும் செய்யப்படும்.அன்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ மரகதாம்பிகை
சமேத ஸ்ரீ மரகதீஸ்வரர் மகான்கள்,
468 சித்தர்கள், ஸ்ரீ காயத்ரி தேவி, மற்றும் ஸ்ரீ மகாமேருக்கு சிறப்பு
அபிஷேகமும் நடைபெறும்.இதனை தொடர்ந்து கோபூஜையுடன் 5 விதமான திரவியங்கள்கொண்டு
ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு மகா அபிஷேகம் நடைபெற்று அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
.
இரண்டு நாட்கள் பூஜையில் வைத்து
பூஜிக்கப்பட்ட இந்த 1,116 கலசங்களும் வருகின்ற பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்தக்
கலசத்தில் அரிசி, தேங்காய், வஸ்திரம், ஜாக்கெட் பிட், வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் போன்றவை இருக்கும்.
கலசத்தில் வைக்கப்பட்டிருக்கும்
அரிசியில் சிறிது எடுத்து, உங்கள் இல்லத்தில் சமையலுக்கு
சேகரித்து வைத்திருக்கும் அரிசியோடு சேர்க்கவும். இதில் மேலும் சிறிதை எடுத்துக்
கொண்டு அதோடு, உங்களது சக்திக்கு ஏற்றவாறு ஒரு கிலோவோ
அல்லது அதற்கு மேலோ சேர்த்து தகுதி உள்ளவர்களுக்கு தானம் செய்து விடவும்.அல்லது தன்வந்திரி பீடத்தில்
நடைபெநறும்
அன்னதானத்திற்கு அளித்து அன்னபூரணியின்அருளைபெறலாம். இத்தகைய கைங்கர்யத்தால் உங்கள்
இல்லத்தில் உணவுப் பஞ்சம் வரவே வராது.
இந்தக் கலசத்தை பூஜையறையில் நிரந்தரமாக
வைத்து வணங்கி வந்தால் குடும்பத்தில் அந்நியோன்னியம், பணியில் எதிர்பார்க்கின்ற நல்மாற்றம், திருமணம் போன்ற சுப வைபவங்கள், குடும்பத்தில் ஒற்றுமை, தொழிலில்
அபிவிருத்தி போன்றவை உட்பட அனைத்தும் கிடைக்கும்.
வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய
பீடத்தின் ஸ்தாபகர், கயிலைமணி டாக்டர் ஸ்ரீமுரளிதர
ஸ்வாமிகள் இந்த வைபவத்துக்குத் தலைமையேற்று நடத்தி வைக்க... எண்ணற்ற மடாதிபதிகள்,
ஆதீனங்கள்,சாதுக்கள் மற்றும்சிவனடியார்கள்முக்கயஸ்தர்கள்கலந்துகொண்டுசிறப்பிக்க உள்ளார்கள்.அன்று நடைபெறும் ஸ்ரீ மகா
பெரியவா புகழ் பி.சுவாமிநாதன் அவர்களின் ஆன்மீக உரையை கேட்டு பயன்பெற
பக்தகோடிகள் அனைவரையும் இந்த வைபவத்தில் கலந்து
கொண்டு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் குருவருளும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் திருவருளும்
பெற அன்புடன் அழைத்து மகிழும்,
தன்வந்திரி குடும்பத்தினர்.
No comments:
Post a Comment