தன்வந்திரி பீடத்தில்
மழை வேண்டியும் வெப்பம் தனியவும்
108
சங்காபிஷேகமும் சோம வார பிரதோஷ பூஜையும் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் இன்று 24.04.2017 திங்கட்கிழமை சோம வார பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் பால்,தயிர்,பழம்சந்தனம், பன்னீர் இளநீர், கொண்டு மஹா அபிஷேகமும் வில்வ
இலைகளாலும், வன்னி இலைகளாலும் அர்ச்சனையும்
நடைபெற்று மஹா தீபாரதனையுடன் சங்குதீர்த்தப் பிரசாதமும் தயிர் சாதமும் வழங்கப்பட்டது.சங்காபிஷேகத்தில்
பங்கேற்றவர்கள் இறைவன் அருளால் மழை பெய்து வெப்பம்
தனியவும் விவசாயிகள் நலம் பெறவும் இயற்கை வளம் பெறவும் மன அமைதி பெறவும் .ஐஸ்வர்யங்கள் வேண்டியும், சகல விதமான நோய்கள் அகலவும், கங்கா தேவியின்
ஆசி கிடைக்கவும், நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள்
குறையவும் நந்தி தேவனையும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரனையும்
ப்ரார்த்தனை செய்தனர்.
நாளை
25.04.2017 ஸ்ரீ ரங்கநாதருடைய ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பால ரங்கநாதருக்கு
சிறப்பு பூஜை நடைபெறயுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment