Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, April 12, 2017

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆண்/பெண் திருமணத் தடை நீங்க சிறப்பு யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 14.04.2017 வெள்ளிக் கிழமை தமிழ் புத்தாண்டு மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாளில் காலை 10.00 மணிக்கு ஆண்கள்,  திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமமும் பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி யாகமும் நடைபெற உள்ளது

இந்த யாகத்தில் கலந்து கொள்ளும்  திருமணமாகாதஆண்கள் மற்றும் பெண்களுக்கு குடும்ப ரீதியாகவும் ஜாதக ரீதியாகவும் ஏற்படும் குலதெய்வ தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் விலகி. பொருத்தமான தகுதியுள்ள கணவன் மனைவி கிடைக்க வழிவகை செய்யும் .பொருத்தமான மணமகன் அல்லது மணமகள் கிடைப்பதற்கு தடையாக இருக்கும் சிக்கல்களை நீக்குகிறது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அளிக்கிறது. பெண்களுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கையை வழங்குகிறது.. இந்த ஹோமம் அனைத்து விதமான உயிர்களையும் ஆசிர்வதிகிறது. மக்களின் கவலையை நீக்கி அவர்களுக்கு தகுந்த திருமண வாழ்க்கை வாழ வழி செய்கிறது. அனைத்து பெண்களுக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை தருகிறது திருமணம் நடைபெற வேண்டி இந்த யாகங்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெறுகிறது. பின்னர் அவர்களுக்கு கலச தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட உள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்..


No comments:

Post a Comment