Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, April 14, 2017

தன்வந்திரி பீடத்தில் தமிழ் புத்தாண்டு விழா.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக  நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞப்படி இன்று 14.04.2017 வெள்ளிக்கிழமை தமிழ்புத்தாண்டு  சங்கடஹர சதுர்த்தி  முன்னிட்டு காலை 5.30 மணிக்கு கோபூஜை,மகா கணபதி பூஜை,சங்கடஹர கணபதி ஹோமம்,சாஸ்தா ஹோமம்  மகா தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ மகா லஷ்மி யாகம் குபேர லஷ்மி யாகம்,ஸ்ரீ ரங்கநார் யாகம்  ஸ்ரீ விநாயகர் தன்வந்திக்கு சிறப்பு வழிபாடும் ஆண்கள்,  திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமமும் பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி யாகமும் நடைபெற்றது..

இந்த தமிழ் புத்தாண்டில் அனைத்து மக்களும் நோய் நொடிகளின்றி ஆரோக்யமாக வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபாரம், உத்தியோகம், சிறக்கவும்.குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படவும் குழந்தைகள் முழு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல் கல்வி சேரவும். நீர் நிலை ஆதாரங்கள் சிறப்படையவும், இயற்கை வளம் பெறவும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடையவும்.மழை வேண்டியும் மத நல்லிணக்கம்,மனித நேயம் வளரவும் இந்த யாகத்திலும் பூஜையிலும் பக்தர்கள் பல்வேறு நன்மைகள் பெற பலவகையான மலர்கள், பட்டு ஸ்திரம்,நெய் தேன்,வெண்கடுகு, வால்மிளகு,சீந்தல்கொடி,போன்ற 108 விதமான மூலிகைகளும் சேர்க்கப்பட்டது..மேலும் நல்லெண்ணை, கரும்புசாறு, மூலிகை தீர்த்தம், நெல்லிக்காய் பொடி பால்,தயிர் இளநீர்,மஞ்சள், சந்தனம், மற்றும் துளசி தீர்த்தம் கொண்டு தன்வந்திரி பீடத்தல் உள்ள  மூலவர் தன்வந்திரிக்கும்  ஆரோக்ய லஷ்மிக்கும் சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது. துளசி இதழ்களாலும் சிறப்பு அர்ச்சனை செய்து, பஞ்சதீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் புத்தாண்டு  தினத்தில் தன்வந்தரியின் அருளை பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





 










No comments:

Post a Comment