Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, April 24, 2017

Amavasai Special Yagams at Sri Danvantri Arogya Peedam, Walajapet on 26.04.2017

தன்வந்திரி பீடத்தில்
அமாவாசையில் நெய் மிளகாய் யாகம்



வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 26.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பித்ரு தோஷம் நீங்க பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீபாதம்,ஸ்ரீ அத்ரி பாதம், அனுசுயாதேவி, ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்,மற்றும் ஸ்ரீ ராகுகேதுவிற்க்கு சிறப்பு பால் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
அமாவாசை என்பதால் நண்பகல் 12.00 மணியளவில் மஹா ப்ரத்தியங்கிரா சன்னதி முன்பு நெய் மிளகாய் கொண்டு சூலினி ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற உள்ளது மேலும் ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிகப்பு குங்குமம்,மஞ்சள் மற்றும் பால்,போன்ற பொருட்களால் மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது.என்ற தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அமாவாசை யாகத்தின் சிறப்பு :

பித்ரு தோஷம் நீங்கும். தடைபட்ட திருமணம் நடைபெறும்..

விவாகரத்து ஆனவர்களுக்கு வாழ்வு மலரும். தம்பதியரிடையே அன்னியோன்னியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.கடுமையான உடல் உபாதைகள் நீங்கும், மனநோகலும் முறையான திருமணம் நடக்கும், கருச்சிதைவை தடுக்கும். ஆண்வாரிசு ஏற்படும். துர்மரணம் ஏற்படாது. போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment