வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
அட்சயதிருதியை முன்னிட்டு குபேர லட்சுமி யாகத்துடன்
16 வகையான யாகங்கள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அட்சயதிருதியை முன்னிட்டு இன்று 29.04.2017 இந்துக்களின் புனித மாதமான சித்திரை மாதத்தை முன்னிட்டு பக்தர்களின்
அனைத்து தேவைகளும் பூர்த்தியாக வேண்டி ஏகோபித்த பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பயன் தரும் 16 ஹோமங்கள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற்றது.இந்த யாகத்தில் திரு.க.மணிவண்ணன் DRO/ மேலாண் இயக்குநர் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை
ஆலைஅம்முண்டி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
யாகம் செய்வதினால்
ஏற்படும் நன்மைகள் : ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த
ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும்
சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான
கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார். மேலும் தேக ஆரோக்கியம்,
செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப்
பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.
இன்று
கீழ்கண்ட 16 ஹோமங்கள் நடைபெற்றது.
1.மகா கணபதி ஹோமம் – காரியத்தடை நீங்க. 2.ஆயுஷ்ய ஹோமம் – ஆயுள் பலம்பெற. 3.சரஸ்வதி 4.லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் – கல்வி கேள்வி
ஞானம்பெற்று அதிக மதிப்பெண்கள் பெற. 5.சுயம்வரகலாபார்வதி
யாகம் – பெண்களின் திருமணத்தடை நீங்க. 6.கந்தர்வராஜ
ஹோமம் – ஆண்களின் திருமணத்தடை நீங்க. 7.சொர்ண ஆகர்ஷ்ண பைரவர் யாகம் – தொழில், உத்தியோகம் பெற. 8.தன்வந்திரி ஹோமம் – நோய்கள் நீங்கி ஆரோக்யம் பெற.9.குபேர லட்சுமி
யாகம் – ஐஸ்வர்யம் பெற்று குடும்பம் ஷேமம்
பெறவும். 10.நவக்கிரஹ சாந்தி ஹோமம் – நவக்கிரஹங்களால்
ஏற்படும் தோஷங்கள் அகல. 11.சனிசாந்தி ஹோமம் – சனிக்கிரஹத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய. 12.கார்த்த வீர்யார்ஜூனர் ஹோமம் – இழந்ததை மீண்டும் பெற. 13.வாஸ்து சாந்தி
ஹோமம் – வாஸ்து தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு
பெற. 14.நட்சத்திர சாந்தி ஹோமம் – நட்சத்திர தோஷங்கள் நீங்கி நன்மைகள் பல பெற. 15.சந்தான கோபால யாகம் – குழந்தைபாக்யம் பெற. 16.மஹா காலபைரவர் ஹோமம் – அனைத்து
கவலைகளும், தடைகளும் நீங்க., முக்தி பெறவும் மேற்கண்ட 16 வகையான ஹோமங்கள் சிறந்த வேத
விற்பன்னர்களைக் கொண்டு ஆகம முறைப்படி முறையாக செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.இதனை தொடர்ந்து நாளை லஷ்மி குபேர்ருக்கு விஷேச அபிஷேகமும்,
சொர்ண புஷ்ப அர்ச்சனையும் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment