அகில
உலக புரோகிதர் நலன் கருதியும், உலக நலன் கருதியும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் சிறப்பு தன்வந்திரி ஹோமம்
நடைபெற்றது. இந்த ஹோமத்தில் தென்னிந்திய புரோகிதர் சங்கம், தமிழகத்தின் பல பகுதிகளில்
இருந்தும் புரோகிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களும் வந்திருந்து கலந்து கொண்டு
சிறப்பித்தனர். ஹோமத்தின் பொழுது ஸ்வாமிகள் அருளுரை வழங்கினார்.
மேலும்
பீடத்தில் வருகிற 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை 5000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு நடைபெற
இருக்கிற மஹா ப்ரத்யங்கிரா தேவி ஹோமத்தை முன்னிட்டு புரோகிதர்கள் தங்கள் கரங்களினால்
பீடத்தில் அமைந்துள்ள ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் அபிஷேகம் செய்தனர்.
பின்னர்
பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment