திருமணத் தடைகள் உள்ள பெண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் நவம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற்றது.
இந்த யாகத்தில் தமிழகம், கர்நாடகா, மும்பை, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் இருந்தும் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.யாகத்தின் பொழுது ஸ்வாமிகள் அருளுரை வழங்கினார்.
மேலும் யாகத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு ஸ்வாமிகள் கலச அபிஷேகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment