விவேகானந்தரின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு
குருவின் குருவான ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் விக்ரம் ப்ரதிஷ்டையானது…
உலக
நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
திருவுளப்படி சென்னை, மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தின் ஆசியுடன் நவம்பர் 22ம் தேதி
வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் விக்ரஹகம் ப்ரதிஷ்டை
வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த
வைபவத்தில் நாட்ராம்பள்ளி, இராமகிருஷ்ண மடத்தின் மடாதிபதி ஸ்ரீ தியாகராஜானந்த சுவாமிகளும்,
சென்னை, கொளத்தூர் ராகவாஸ்ரமம் ஸ்ரீ ராஜலட்சுமி அம்மாள் அவர்களும் கலந்து கொண்டு, பீடத்திற்கு
வருகை தந்த பக்தர்களுக்கும், தன்வந்திரி குடும்பத்தினருக்கும் ஆன்மிக அருளுரை வழங்கி
ஆசீர் வதித்தார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளும் கலந்து
கொண்டனர்.
மேலும்
ஆன்மிக திருப்பணிச் செம்மல் மகாலட்சுமி சுப்ரமணியன், லோகநாதன் ஸ்தபதி, டாக்டர் தொப்பகவுண்டர்,
டாக்டர் ரங்கராஜன், டாக்டர் ஜெகன், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை, சென்னை ஆகியோர்களும், பத்திரிகை
நிருபர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த
வைபவத்தை சிறந்த வேத விற்பன்னர்களான ஸ்ரீலஸ்ரீ ராஜப்பா சிவம், ஸ்ரீலஸ்ரீ பாலாஜி சிவம்,
ஸ்ரீலஸ்ரீ ராஜீவ்காந்தி சிவம், ஸ்ரீலஸ்ரீ விவேகானந்த சிவம் ஆகியோர் சிறப்பாக நடத்தி
தந்தனர்.
இதனைத்
தொடர்ந்து சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளுக்கு வஸ்த்திர தானம் வழங்கப்பட்டது. பின்னர்
பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment