Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, August 30, 2022

vinayagar chathurthi special mega 48 Ganapathi Homams on Danvantri Peedam At 31.8.2022



 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  விநாயகர் சதுர்த்தியை ஒட்டி

27நட்சத்திர,  9 நவக்கிரக,12 ராசிகளுக்கும், 48  ஹோமகுண்டங்கள் அமைத்து
48 ஹோம குண்டங்களில் மாபெரும் கணபதி  ஹோமங்களுடன்
காலச்சக்கர பூஜை

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  விநாயகர் சதுர்த்தியை  ஒட்டி  நாளை ஆவணி 16ம்தேதி , 31.8.2022ம்தேதி,  புதன்கிழமை காலை 10 மணிக்கு , விநாயகர் சதுர்த்தியை ஒட்டி  27 நட்சத்திரங்களுக்கும், 12 ராசிகளுக்கும் ,9 நவக்கிரகங்களுக்கும் என மொத்தம்  48 ஹோம குண்டங்கள் அமைத்து, 48 கணபதிக வைத்து  48 பேர் அமர்ந்து  நடைபெற  உள்ள    மாபெரும்  மஹா கணபதி ஹோமங்களுடன்  நடைபெறும் காலச்சக்கர பூஜையும்  மிகவும் சிறப்பு வாய்ந்தது என்கின்றனர்  தன்வந்திரி குடும்பத்தினர்.

48  ஹோம குண்டங்கள் வைத்து நடைபெறும்
மஹா கணபதி  ஹோம பலன்கள்
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடைபெறும் இந்த 48 கணபதி ஹோமங்கள்  மூலம்  நட்சத்திர, நவக்கிரக தோஷங்கள் மற்றும்  12 ராசிகளில் ஏற்படும் அசுப பலன்கள் குறைந்து சுப பலன்கள் ஏற்படும் மேலும்  கெட்ட சக்திகளை அழித்து நன்மை தரும்,  குழந்தைப்பேறு  கிடைக்கும்,  அனைத்து விதமான தடைகள்  நீங்கி விரைவில் திருமணம், தொழில், வியாபாரம், விவசாயம் , உத்தியோகம்  போன்றவைகள்  நல்ல முறையில் அமைந்து குடும்ப சுபிட்சத்துடனும்,  மன மகிழ்ச்சியுடனும்  வாழலாம்.

 ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம்  மஹா கணபதியின்  பரிபூரண அருளால் கர்ம வினைகள்  நீங்கி   நல்லபுத்தி, ஞானம் கிடைக்கும்,  புண்ணியம் உண்டாகும், வீட்டில் தானியம் பெருகும், நவக்கிரக தோஷங்கள் , மனக்கவலைகள் விலகும்,  பொன்,பொருள் சேர்க்கையும், செயல்களில் வெற்றியும் ஏற்படும்,  நோய்கள் குணமாகும்.எனவே   பொதுமக்கள், பக்தர்கள் இந்த ஹோமங்களில்  பங்கு பெற்று , விநாயகர் ஆசியுடன் , ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியும் ஒரு சேர பெற்று  நலம்  பல பெறலாம்.
இதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கும், 27 நட்சத்திரங்கள்,9 நவக்கிரகங்கள், 12 ராசிகளுக்கு உரிய  விருட்சங்களுக்கு கலச பூஜையும், சிறப்பு  ப்ரார்த்தனையும்  நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர். 

No comments:

Post a Comment