ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பூச நட்சத்திர சாந்தி பரிகார ஹோமம் /கார்த்தவீர்யார்ஜூனர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , திருவாதிரை நட்சத்திரம் முதல் திருவோணம் நட்சத்திரம் வரையிலான 16 நாட்கள் ஹோமம் தினமும் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்று வருகிறது.
மூன்றாவது நாளான இன்று 25.8.2022 ம்தேதி வியாழக்கிழமை மகா தன்வந்திரி ஹோமம், பூசம் நட்சத்திர சாந்தி பரிகார ஹோமம், கார்த்தவீர்யார்ஜூனர் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமம் நடைபெற்றது.
ஹோமம் மற்றும் பூஜைகளில் ஆரணி தொழிலதிபர். அசோக் லோகநாதன் குடும்பத்தினர்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள நகர,கிராம பொதுமக்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
பூஜை மற்றும் ஹோமங்களில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து நாளை அமாவாசை யாகம் மற்றும் ஆயில்யம் நட்சத்திர பரிகார ஹோமம், தன்வந்திரி ஹோமமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment