Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, August 22, 2022

Vaasthu day & Kamika yegathasi Homam at sri danvantri arokya peedam

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வாஸ்து நாள் மற்றும் 

ஆவணி மாத தேய்பிறை ‘ காமிகா ’ ஏகாதசியை

முன்னிட்டு சிறப்பு ஹோமம் & அபிஷேகம்  

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை  ஸ்ரீ தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தில்,  ஸ்தாபகர்  ‘யக்ஞஸ்ரீ  கயிலை ஞானகுரு ’ டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , உலக மக்கள் நலன் கருதி   ஆவணி மாத 6ம்தேதி ( திங்கள்கிழமை) 22.8.2022 தேதி வாஸ்து நாளை முன்னிட்டு  காலை 7.30 மணி  முதல் 9 மணிக்குள்ளாக  

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரத்யேகமாக பஞ்சபூதங்கள் ,அஷ்டதிக் பாலகர்களுடன்   தனி சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு , வாஸ்து ஹோமமும்  அஷ்ட திரவிய அபிஷேகமும் , சிறப்பு  பிரார்த்தனையும் நடைபெற்றது.

 பூஜைகளை தொடர்ந்து  ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வைத்து  பூஜிக்கப்பட்ட  வாஸ்து செங்கல் , வாஸ்து யந்திரம் ,மச்ச யந்திரம் , வில்வகாய் , திருஷ்டி தேங்காய் , திருஷ்டி பொம்மை  ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்கள்   விரைவில் புதிய  வீடு  அமையவும், மனை தோஷங்கள் அகலவும்  வாஸ்து பகவானை வேண்டி , வாஸ்து தோஷ  நிவர்த்தி பிரசாதத்தை பெற்று சென்றனர்.

மேலும்  மிக சிறப்பு வாய்ந்த ஆவணி மாத தேய்பிறை  ‘ காமிகா’ ஏகாதசியை  முன்னிட்டு  காலை 10.30 மணிக்கு  மேல்   ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு  சிறப்பு  மகா   ஹோமத்துடன் , நெல்லிப்பொடி திருமஞ்சனமும் நடைபெற்றது.ஆன்ம பலம் பெருகவும், மனபயம், மரண பயம்,  துன்பங்கள் நீங்கி  நிம்மதி அடையவும், உடல் மற்றும் மன நோய்களிலிருந்து விடுபட்டு நிவாரணம்  பெறவும் , ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெறுவதற்கான தடைகள் நீங்கி





,சகல சம்பத்துடன் வாழ  நடைபெற்ற  ஹோமம் மற்றும்  சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.


No comments:

Post a Comment