ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஆவணி அமாவாசையை முன்னிட்டு குருதி பூஜை,
பகவதி சேவா, மிளகாய் யாகம்,
ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , ஆவணி அமாவாசையை முன்னிட்டு கேரள முறை குருதி பூஜை, பகவதி சேவா, மகிஷாசுரமர்த்தினிக்கு மகா அபிஷேகம் மற்றும் ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம் ஆகியவை நடைபெற்றது .
அமாவாசை யாகம்
அமாவாசை பூஜைகள் மற்றும் ஹோமம் சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழ வழி செய்து, பித்ருக்களை நினைவு கூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள் தர்ம காரியங்கள் ஆத்மாக்களுக்கு மகிழ்ச்சி அளித்து முன்னோர்களின் பரிபூரணி ஆசி கிடைக்கவும் , துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைந்து முக்தி கிடைக்கவும், செய்வினை கோளாறுகள் , ஒரே வீட்டில் இருவருக்கு ராகு திசை அல்லது கேது திசை நடப்பவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் தீரவும், நாகதோஷம், சர்ப்பதோஷம், பில்லி, சூனியம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக்கூடிய தடைகள் அகலவும், பணப்பிரச்சனை , கடன் பிரச்சனை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், அகால மரணம் நிகழாமல் இருக்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும் , ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 24 மணி நேர அணையா யாக குண்டத்தில் அமாவாசை யாகம் நடை பெற்றது.
முன்னதாக நட்சத்திர சாந்தி பரிகார ஹோமமும் நடைபெற்றது.
ஹோமம் மற்றும் பூஜைகளில் சுற்றுப்புறத்தில் உள்ள நகர,கிராம பொதுமக்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தேவியின் அருளையும் பெற சாமி தரிசனம் செய்தனர்.
பூஜை மற்றும் ஹோமங்களில் கலந்து கொண்டவர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசி வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment