தினசரி யாகங்கள் நடைபெற்று வரும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆக்ஞைப்படி, திருவாதிரை முதல் திருவோணம் வரை தினமும் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை ஆயுள்,ஆரோக்கியம்,குடும்ப ஷேமம், தொழில்,வியாபாரம் வேண்டியும், திருமணம்,குழந்தை பாக்கியம்,தம்பதிகள் ஒற்றுமை,பொன் பொருள் சேர்க்கை வேண்டியும், திருஷ்டி தோஷங்கள், நீங்கவும்,மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றி பெறவும், கல்வி தரம் உயரவும். விபத்துகள் தடுக்கவும்,புதிய வீடு அமையவும் போன்ற பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மாபெரும் சிறப்பு தன்வந்திரி ஹோமங்களுடன் கார்ய சித்தி ஹோமங்கள் பதினாறு செல்வங்கள் கிடைத்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ தொடர்ந்து 16 நாட்கள் யாகங்கள் நடைபெற உள்ளது.
இன்று தன்வந்திரி ஹோமத்துடன் நட்சத்திர சாந்தி ஹோமம் ஆவணி மாதம் 7ந் தேதி செவ்வாய் கிழமை (23.08.2022) ஏகாதசியுடன் கூடிய துவாதசி திதியில் கோ பூஜையுடன் தொடங்கியது .
திரு. வேதாகம சிவாச்சாரியார் பாலாஜி சிவம் அவர்கள் இந்த யாகத்தை தொடங்கி நடத்தி வைத்தார்.
இந்த யாகத்தில் திருவாதிரை உள்பட 27 நட்சத்திர காரக்களின் நலன் கருதியும், ஆரோக்கியம் கருதியும் மேற்கண்ட காரணங்களுக்காகவும் மகா தன்வவந்திரி ஹோமத்துடன் நட்சத்திர பரிகார ஹோமம் நடைபெற்றது. இதில் உரிக்கொடி, கருடகிழங்கு, ஆடா தொடா, விஷ்ணு கிராந்தி, துளசி, பற்படாகம் , கோரைக்கிழங்கு, வெண்கடுகு, நாயுருவி, கஸ்தூரி மஞ்சள், சீந்தல்கொடி , பசுநெய் போன்ற 100க்கும் மேற்பட்ட மூலிகை திரவியங்களும், நவதானியங்களும் யாகத்தில் சேர்த்து மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கும் , மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் இன்று வாலாஜா முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி அவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் குடியாத்தம் வாஸ்து.ராஜேந்திரன் குடும்பத்தினர், சென்னையை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஹோமத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது .
இந்த ஹோமங்கள் வருகிற ஆவணி 23 ம்தேதி வியாழக்கிழமை
( 08.09.2022 )வரை தினமும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment