Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, August 20, 2022

KRISHNA JEYANTHI CELEBRATION IN SRI DANVANTRI AROKYA PEEDAM

 தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா ,

அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை

 உலகம் முழுவதிலும்  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினம்
 ஸ்ரீ ஜெயந்தி , கோகுலாஷ்டமி  என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனக்காக இல்லாமல்  பிறருக்காக வாழ்ந்தவர் .
 கோகுலாஷ்டமி  தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கே வந்து
 அருள்பாலித்து அருள்வார் என்ற ஐதீகமே முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

 தன்வந்திரி பீடத்தில் நவநீத கிருஷ்ணர்

ராணிப்பேட்டை மாவட்டம்,  வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ,
பீடத்தின்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ‘‘ யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு ’’ டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்  பெரு முயற்சியுடன்  நோய் தீர்க்கும்  கடவுளான தன்வந்திரி பகவானுக்கும்  இதர 89 பரிவார தெய்வங்களுக்கும்  திருச்சன்னதிகள் அமைத்து  உலக மக்கள் நலன் கருதி அவ்வப்போது  சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  கோகுலாஷ்டமியை  முன்னிட்டும்  ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவீன முறையில் கல் ஊஞ்சலில் ,ஒரு அடி உயர  தவழ்ந்த கோலத்தில்  உள்ள  நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் , மஹா அபிஷேக , ஆராதனைகள் நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ண ஹோமம்
 ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை  முன்னிட்டு   தம்பதியர் குழந்தை பாக்யம் பெற வேண்டியும், குடும்ப ஒற்றுமை, அகந்தை அகன்றிட, தர்மசீலராக  வாழ, அரசியல்  ஞானம் உண்டாக,  நிர்வாக திறன் அதிகரிக்க , திருமணத்தடை அகல,  செல்வம் பெருக, வயல்களில் விளைச்சல் அதிகரிக்க, அமைதி நிலவ, ஆற்றல்  பெருக, வறுமை இல்லா வாழ்வு அமைய  வேண்டி  ஸ்ரீ கிருஷ்ணயாகம், கூட்டு பிரார்த்தனையுடன் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி  விழாவாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த  வெண்ணெய் , சீடை, முறுக்கு , தட்டை, அப்பம்,  லட்டு போன்ற  பல்வேறு பலகாரங்கள் , பழங்கள் வைத்து  நிவேதனம்  செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ‘‘யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’ டாக்டர் ஸ்ரீ  முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன்  உலக மக்கள் நலன் கருதி   இன்று (19.8.2022)  தேய்பிறை அஷ்டமியை  முன்னிட்டு   கால பைரவருக்கு சிறப்பு பூஜையும்,  அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.

இந்த பூஜையில் வீடு , மனை வாஸ்து தோஷங்கள்  நீங்கவும், கெட்ட சக்திகள் விலகவும், குடும்பத்தில் சச்சரவுகள் நீங்க, தாம்பத்ய  உறவில் விரிசல் அகல, நல்ல வேலை கிடைக்க , திருஷ்டிகள் நீங்க, நாக, சர்ப்ப தோஷங்கள் நீங்க, செய்வினை கோளாறுகள்,  பில்லி, சூன்யம்  போன்றவை அகன்றிட, திருமணம் கைகூட, சந்தான பிராப்தம்  கிடைக்க , தொழில்களில் தடைகள் அகல, பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை  அகல,  மரண பயம் நீங்க, மாங்கல்ய தோஷம் அகல, நல்ல தொழிலாளர்கள் கிடைத்து  தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும் பிரார்த்தனை நடைபெற்றது.
 பூஜையில் பங்கேற்ற  பக்தர்களுக்கு  ஹோம பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளைஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். 


No comments:

Post a Comment