ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
நட்சத்திர சாந்தி பரிகார ஹோமம்,பிரதோஷம் மற்றும் ராகு கேது சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , திருவாதிரை நட்சத்திரம் முதல் திருவோணம் நட்சத்திரம் வரையிலான 16 நாட்கள் ஹோமம் தினமும் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்று வருகிறது.
இரண்டாவது நாளான இன்று 24.8.2022 ம்தேதி புதன்கிழமை மகா தன்வந்திரி ஹோமத்துடன், புனர்பூச நட்சத்திர சாந்தி பரிகார ஹோமம் நடைபெற்று, நட்சத்திர விருட்சங்கள் உள்ள காலசக்கரத்திற்கு சிறப்பு பூஜைகளும், பௌமவார பிரதோஷத்தை முன்னிட்டும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத
ஸ்ரீ மரகதேஸ்வருக்கும் , சிவலிங்க வடிவில் உள்ள 468 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
ஹோமம் மற்றும் பூஜைகளில் சிங்கப்பூரை சேர்ந்த வைத்தியநாதன் குடும்பத்தினர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த ஏரளமான பக்தர்களும் பங்கேற்று தடைபட்டுள்ள அனைத்து சுப நிகழ்ச்சிகளும் விரைவில் நடைபெற வேண்டியும், ஆயுள் தோஷம், நட்சத்திர தோஷம் அகலவும் ப்ரார்த்தனை செய்து, ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
பூஜை மற்றும் ஹோமங்களில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.முன்னதாக ராகு கேதுவிற்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
இதை தொடர்ந்து நாளை ஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் நலன் கருதி, ஆயில்ய நட்சத்திர பரிகார ஹோமம், தன்வந்திரி ஹோமமும் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment