ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
48 ஹோம குண்டங்களில் ,48 மஹா கணபதி ஹோமங்கள்
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும், உலக மக்கள் நலன் கருதி இன்று ஆவணி 15ம்தேதி , 31.8.2022ம்தேதி, புதன்கிழமை காலை 10 மணிக்கு 27 நட்சத்திரங்களுக்கும், 12 ராசிகளுக்கும் ,9 நவக்கிரகங்களுக்கும் என மொத்தம்
48 ஹோம குண்டங்கள் அமைத்து, 48 விநாயகர் சிலைகள் வைத்து தன்வந்திரி குடும்பத்தினர், சேவார்த்திகள், பக்தர்கள், பொதுமக்கள் என மொத்தம் 48 பேர் அமர்ந்து நடத்திய மாபெரும் 48 மஹா கணபதி ஹோமங்கள் நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கும், ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கும் நவ கலச திருமஞ்சனம் நடைபெற்று ,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 108 தேங்காய்கள் சிதலைக்காய்களாக விடப்பட்டது.
48 ஹோம குண்டங்கள் வைத்து நடைபெற்ற மஹா கணபதி ஹோமத்தில், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல், கரும்பு ,வேர்க்கடலை, மக்காளச்சோளம் , அப்பம், அவல் பொறி,சுண்டல் மற்றும் விளாம்ப-ழம் ஆகியவை வைத்து நிவேதனம் செய்து சமர்பிக்கப்பட்டது.
பலன்கள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த 48 கணபதி ஹோமங்களில் உலக மக்கள் நலன் கருதியும், நட்சத்திர, நவக்கிரக தோஷங்கள் மற்றும் 12 ராசிகளில் ஏற்படும் அசுப பலன்கள் குறைந்து சுப பலன்கள் ஏற்படவும், கெட்ட சக்திகள் அழித்து நன்மை பெறவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் , அனைத்து விதமான தடைகள் நீங்கி விரைவில் திருமணம், தொழில், வியாபாரம், விவசாயம் , உத்தியோகம் போன்றவைகள் நல்ல முறையில் அமைந்து குடும்ப சுபிட்சத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழ ப்ரார்த்தனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளாலேயே ஹோமம் செய்து வழிபட்டு சென்றனர்.
48 மஹா கணபதி ஹோமத்தில் பங்கேற்றதின் மூலம் மஹா கணபதியின் பரிபூரண அருளால் கர்ம வினைகள் நீங்கி நல்லபுத்தி, ஞானம் கிடைக்கும், புண்ணியம் உண்டாகும், வீட்டில் தானியம் பெருகும், நவக்கிரக தோஷங்கள் , மனக்கவலைகள் விலகும், பொன்,பொருள் சேர்க்கையும், செயல்களில் வெற்றியும் ஏற்படும், நோய்கள் குணமாகும் என்பது பங்கு பெற்ற பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
காலச்சக்கர பூஜை
இதனை தொடர்ந்து 27 நட்சத்திரங்கள்,9 நவக்கிரகங்கள், 12 ராசிகளுக்கு உரிய விருட்சங்களுக்கு கலச பூஜையும், சிறப்பு ப்ரார்த்தனையும் நடைபெற்றது.
மகா கணபதி ஹோமம் மற்றும் பூஜையில் கலந்து கொண்ட பொதுமக்கள், பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன், பிரசாதமும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.