Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, August 31, 2019

Nava Chandi Yagam with 1600 KG Turmeric Seeds


தன்வந்திரி பீடத்தில்1600 கிலோ மஞ்சள் கிழங்குடன்மாபெரும் நவசண்டி யாகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி 30.08.2019 வெள்ளிக்கிழமை ஆவணி அமாவாசையை முன்னிட்டு 1600 கிலோ மஞ்சள் கிழங்குகள் கொண்டு நவ சண்டி யாகம் நடைபெற்றது. இந்த யாகமானது சென்ற 28.08.2019 புதன்கிழமை அஷ்ட பைரவர் யாகத்துடன் துவங்கியது. தொடர்ந்து 29.08.2019 வியாழக்கிழமை நவ துர்கா யாகம் நடைபெற்று நேற்று நவ சண்டி யாக, மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது.
இந்த யாகத்தில் பட்டு வஸ்திரங்கள், சௌபாக்ய பொருட்கள், விசேஷ மூலிகைகள், நவ சமித்துகள், பட்சணங்கள், பழங்கள், தாமரை மலர்கள், புஷ்பங்கள், மஞ்சள், குங்குமம், நிவேதன பொருட்கள், மேலும் ஏராளமானவை சமர்ப்பிக்கப்பட்டு யக்ஞஸ்ரீ முர்ளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் காலபைரவருக்கு குருதி பூஜையுடன் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சென்னை திருமதி. ஜலஜா கோபாலகிருஷ்ணன் குழுவினர்களின் ஸ்ரீ தேவி மாஹாத்மியம், ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், ஸ்ரீ சௌந்தர்யலஹரி, ஸ்ரீமன் நாராயணீயம், ஸ்ரீ விஷ்னு சஹஸ்ரநாமம் பாராயணங்கள் நடைபெற்றது.
இவ்வைபவங்களில் திருக்கழுகுன்றம் சிவஸ்ரீ அன்புசெழியன் அவர்கள், ஆற்காடு தொழிலதிபர் திரு. J.லக்ஷ்மணன் அவர்கள், சக்தி ஆன்லைன் ஸ்தாபகர் திரு. பார்திபன் அவர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் இதில் உலக மக்கள் நலன், இயற்கை வளம் மற்றும் ஏராளமான பல நன்மைகளுக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வதித்து மஞ்சள் கிழங்கு சண்டி ஹோம பிரசாதமாக வழங்கினார். இதனை தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




















  

No comments:

Post a Comment