வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்சரபேஸ்வரர் யாகம் - சத்ரு சம்ஹார ஹோமம் பாராயணங்களுடன் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி இன்று 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சரபேஸ்வரர் யாகம், சத்ரு சம்ஹார பூஜை, பக்தி பாரயணங்களும் நடைபெற்றது.
இதில் சென்னை அரும்பாக்கம் திரு. பக்தவத்ஸலம் குடும்பத்தினர், சென்னை ராகவர்ஷிணி குழுவினர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். இந்த யாகங்களில் நெய், தேன், நவசமித்துகள், விசேஷ மூலிகைகள், மஞ்சள், பூசனிக்காய், பழங்கள், புஷ்பங்கள், நிவேதன பொருட்கள், மற்றும் ஏராளமான விசேஷ திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. மேலும் ஸ்ரீ விநாயக தன்வந்திரி, ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி இறைபிரசாதம் வழங்கினார். தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment