தன்வந்திரி
பீடத்தில்
ஆடி கூழ்வார்த்தல்
விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்”
அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், மழை
வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சகல
விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும், விவசாய பெருமக்களின்
நலனுக்காகவும், ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று
02.08.2019 காலை 10.00 மணி முதல் 12.00 மணி
வரை ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு ஹோமத்துடன் கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. மேலும்
இதனை தொடர்ந்து பீடத்தில் உள்ள பதாள சொர்ண சனீஸ்வரர், ஜெய மங்கள சனீஸ்வரர் மற்றும்
லக்ஷ்மி வராஹர் ஆலயங்களின் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கு
வெள்ளி கவசம் சார்த்தும் வைபவமும் நடைபெற்றது.
இதில் கரூர் திரு. T.R.புருஷோத்தமன்
குடும்பத்தினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
இவ்வைபவங்களில் பங்கேற்ற பக்தர்கள் திருமணம் நடைபெறவும், மழலைச்
செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவும், நிறைந்த செல்வம் இல்லம்
தேடி வரவும், கணவருக்கு தீர்க்காயுள் ஏற்படவும், அளவற்ற
நன்மைகள் கிடைக்கவும், எதிரிகள் தொல்லை விலகவும், வேலை வாய்ப்பு கிடைக்கவும், நோய்கள் அகலவும்,
போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்ப்பட பிரார்த்தனை செய்தனர். மேலும்
பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை
பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment