வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரிஆரோக்ய
பீடத்தில் கோடி ஜப யாகம் துவங்கியதுஸ்வாமிகளின்
59
ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டுஇன்று
28.08.2019 முதல் 03.11.2019 வரை மஹா சுதர்சன
– தன்வந்திரி – திருஷ்டி துர்கா ஹோமம்தொடர்
யாகம் துவங்கியது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்வாமிகளின் 59 ஆவது ஜெயந்தி விழா, ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா,
குரு பெயர்ச்சி விழா என முப்பெரும்
விழாவை முன்னிட்டு இன்று 28.03.2019 காலை
8.00 மணியளவில்
கோபூஜை,
புண்ணியகவாசனம், யாகசாலை பூஜை, வேத பாராயணம், மங்கள வாதியத்துடன் ஸ்ரீ மஹா சுதர்சன
– தன்வந்திரி – திருஷ்டி துர்கா கோடி ஜப ஹோமம் துவங்கியது. இந்த யாகம் வருகிற
03.11.2019 வரை நடைபெற
உள்ளது.
இந்த
யாகத்தில் தொழிலதிபர் திரு. W.R.மஹேந்திரவர்மன், வாலாஜா காவல்துறை ஆய்வாளர் திரு. பாலு, இராணிபேட்டை சரக தீ அணைப்பு துறை அலுவளர் திரு. மஹேந்திரன்,
மலேஷிய பக்தர்கள் திரு. சரவணன், திரு. பாஸ்கரன், வாலாஜா தொலை தொடர்பு
துறை அதிகாரி திருமதி. கஜலக்ஷ்மி, வாலாஜா
M.S. ஸ்க்ரீன்ஸ் திரு. சேதுராமன், கீழ்புதுபேட்டை திரு. தேவராஜ சாமியார் மற்றும் பலர் கலந்து
கொண்டனர். இந்த யாகத்தில் ஸ்ரீ தன்வந்திரிக்குரிய விசேஷ திரவியங்கள்
சேர்க்கப்பட்டன. வருகை புரிந்த பக்தர்களுக்கு பீடாதிபதி முரளிதர
ஸ்வாமிகல் அருளாசிகளை வழங்கி மஞ்சள் பிரசாதம் வழங்கினார். இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment