தன்வந்திரி பீடத்தில்ஏகாதசியை முன்னிட்டு நெல்லிப்பொடி திருமஞ்சனம்நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆசிகளுடன் ஏகாதசியை முன்னிட்டு இன்று 26.08.2019 திங்கள்கிழமை
காலை
10.00 மணி
முதல் 12.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு
ஏகாதசி ஹோமத்துடன் நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெற்றது.
பெருமாளை
வழிபடுவதில் மிகவும் முக்கியமான நாள் ஏகாதசி. இந்நாளில் பெருமாளை வேண்டி நடைபெறும்
பூஜைகளில் பங்கேற்று வழிபட்டால் சகல சௌபாக்யங்களும், ஆரோக்யமும், ஆயுள் விருத்தியும்,
நல்வாழ்வும் கிடைக்கும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஏகாதசி திதியில் நோய் தீர்க்கும்
கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெற்ற ஏகாதசி ஹோமத்தில் விசேஷ மூலிகைகள்,
நவசமித்துகள், நெய், தேன், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி
நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி, மஞ்சள், சந்தனம்,
பால், தையிர், பன்னீர் போன்ற பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்
பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு நெல்லிப்பொடி தீர்த்தத்துடன் பூஜை பிரசாதங்கள்
வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment