தன்வந்திரி பீடத்தில்சகல தேவதா ஹோமத்துடன்சத்ரு சம்ஹார சுப்ரமண்ய யாகம் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி லோக
க்ஷேமத்திற்காக வருகிற 26.08.2019 செவ்வாய்கிழமை ஏகாதசி திதி
வரை
நடைபெறும் சகல தேவதா ஹோமம் இன்று 06.08.2019 செவ்வாய்கிழமை
காலை
8.00 மணிக்கு
துவங்கியது. மேலும் ஷஷ்டி திதியை முன்னிட்டு இன்று காலை 10.00 மணி
முதல் 12.00 மணி வரை ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சத்ரு
சம்ஹார சுப்ரமண்ய யாகத்துடன் பஞ்ச திரவிய அபிஷேகம் நடைபெற்றது.
இதில் கோ பூஜை, வேத பாராயணம், திருப்பள்ளி எழுச்சி, காலசந்தி பூஜை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம் நடைபெற்று
மேற்கண்ட யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் விசேஷ மூலிகைகள், நவ சமித்துக்கள், நவ தானியங்கள், பட்டு வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன், மஞ்சள், குங்குமம், சௌபாக்ய பொருட்கள் போன்றவை சேர்க்கபட்டது.
மேலும்
ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்று நற்குழந்தை பேறு உண்டாகவும், அனைத்து தோஷங்கள் நீங்கி அஷ்ட ஐஸ்வரியங்கள்
பெறவும், உத்தியோகம் கிடைக்கவும், வியாபாரம்
அபிவிருத்தி அடையவும், ஆனந்தமான
வசதியான அமைதியான நல்ல இல்லற வாழ்வு ஆகியவை கிடைக்கவும்,
சத்ரு உபாதைகள் விலகவும் குட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு
இறை பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment