Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, August 11, 2019

Ekadasi Homam - Amla Powder Thirumanjanam


தன்வந்திரி பீடத்தில்நோய் தீர்க்கும் நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சயனி ஏகாதசியை முன்னிட்டு இன்று 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெற்றது.

இதில் சுவிட்சர்லாந்து, ஆஸ்த்ரேலியா போன்ற மேலை நாட்டு பக்தர்களும், ஆந்திரம், கர்னாடக மாநில பக்தர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பக்தர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்று உலக நலத்திற்காகவும், உடல் நலத்திற்காகவும் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
இந்த ஏகாதசி ஹோமத்தில், நெய், தேன், நவ சமித்துகள், விசேஷ மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் கொண்டு திருமஞ்சனம் நடைபெற்று நெல்லிப்பொடி தீர்த்த திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.








1 comment:

  1. Thanks for sharing this informative information about organic amla powder with us. It's very helpful. Keep it up!

    ReplyDelete