
இன்று
உலக மக்களிடையே பலபேருக்கு பல்வேறு வகையான நோய்கள் ஏற்பட்டு, உடல் நலத்தோடு, மனநலமும்
பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் புற்று நோய், கொடிய விபத்து, மூளை சம்பந்தப்பட்ட
நோய்கள், இருதயம் பாதிப்புகள் இதுபோன்று பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இதில்
பலதரப்பு மக்களும் வந்திருந்து தன்வந்திரி பகவானையும், இதர 65 விதமான பரிவார தெய்வங்களையும்,
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளையும் பெற்றுச் சென்றவண்ணம் உள்ளனர். இவ்வாறு
வந்து செல்கின்ற பக்தர்களின் பிரச்னைகளை முன்னிருத்தி ஸ்வாமிகள், பெரும் பொருட்செலவு செய்து
நோய்களை குணப்படுத்த முடியாத ஏழை எளிய மக்களுக்கு எந்த வகையிலாவது நம்மால் முடிந்த
உதவிகளை செய்ய வேண்டும் என்றும், புற்றுநோய், கொடிய விபத்துக்களில் சிக்கி அவசர சிகிச்சைப்
பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள், பிரசவ காலங்களில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து
விடுபட என இதுபோன்ற கஷ்டமான காலங்களில் என்ன செய்வது என்று விடைதெரியாமல் இருப்பவர்களுக்கு
உதவ வேண்டும் என்றும் எண்ணினார். மேலும் ஏற்கனவே கடந்த பத்து ஆண்டு காலமாக புற்று நோய்
உள்ளவர்களுக்கு இலவச சேவை செய்து வருகிறார் நமது ஸ்வாமிகள்.
அதன்
அடிப்படையில் இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்காக சிறப்பு இலவச தன்வந்திரி ஹோமத்தை
நடத்த உள்ளார் நமது ஸ்வாமிகள். எனவே பக்தர்கள் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ பீடத்தை
தொடர்பு கொண்டு இந்த தன்வந்திரி ஹோமத்தில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமாய் பிரார்த்திக்கின்றோம்.
தன்வந்திரி குடும்பத்தினர்.
மேலும் தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513. வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment