Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, September 6, 2013

தினசரி நண்பகல் கோ பூஜை…

தன்வந்திரி பீடத்தில் 
தினசரி நண்பகல் கோ பூஜை…

   


பசுவின் சிறப்புகள்
பழைய காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. “பெண்ணாகப் பிறந்தால் பசுவாகப் பிறக்க வேண்டும்ஏனென்றால் பால்சுரக்கும் வரையாவது ஒருவரின் ஸம்ரக்ஷணையில் பூஜை புனஸ்கார மரியாதைகளுடன் வாழ்க்கையைக் கழிக்கலாம். ஆகையால் கோ பூஜை, தானம், சேவை முதலானவை நமது நாட்டின் பண்பாடாகவே உள்ளது எனலாம்.

பசு மாடு என்றால், அதன் பாலை ஒட்டக் கறந்து விடக்கூடாது என்பது தர்மம்; கன்றுக் குட்டிக்கும் பால் விட வேண்டும். நம் குழந்தை மாதிரி, பசுவுக்கு அதன் கன்றும் குழந்தை தானே! பசுவின் மடியில் உள்ள நான்கு காம்புகளில், ஒரு காம்பு தேவதைகளுக்கும், ஒன்று, பூஜைக்கும், ஒன்று, கன்றுக் குட்டிக்கும் என்பது சாஸ்திரங்கள் கூறுகின்றன.

உயிருடன் தானம் செய்யக்கூடிய ஒரே ஒரு பிராணி பசுமாடு மட்டுமே. இரண்டாவது கன்றினை ஈன்ற பசுவானகோவை பூஜிப்பதும், தானம் செய்வதும் அஷ்டலக்ஷ்மி கடாக்ஷத்திற்கும், எல்லாப் பாபங்களையும் போக்குவதற்கும் மிகச் சிறந்த பிராயச்சித்தமாக பல தர்ம சாஸ்த்ர நூல்களில் கூறப்பட்டுள்ளன.

கோ-வதம் என்கிற பசுவினைக் கொல்லும் செயல் ப்ராயச்சித்தம் இல்லாத ஐந்து மஹா பாபங்களில் ஒன்றாகும். “தாய் - மாத்ரு” “சிசு = குழந்தை” “ப்ராஹ்மணன்” “கருஆகியவற்றை நாசம் செய்தால் அதற்குப் பரிஹாரம் இல்லை. அதைப் போல் பசுவைக் கொன்றாலும் அந்தப் பாபத்திற்கு ப்ராயச்சித்தம் இல்லை எனலாம்.

க்ருஹப்ரவேசம் முதலான விசேஷங்களுக்கும் கோ பூஜை உண்டு. பூஜிக்கும் இடங்களிலும், இதர சுத்தி செய்யக் கூடிய இடங்களிலும் பயன்படுவது பசுவினது கோமியம் மட்டுமே ஆகும். கோவினுடைய பாதம் பட்ட வீட்டில் செல்வம் அளவற்றதாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு பசுவை தானம் செய்ய வேண்டும். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற இதர விசேஷங்களில் கோ தானம் என்பது ஓர் அங்கமாகவே இருக்கின்றது.
பசுவை பூஜிப்பவன், போஷிப்பவன் எல்லாருமே சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணிய லோகத்தை அடைவர்.

பசுவின் தேகத்தில் சகல தேவர்களும் வாசம் செய்கின்றனர். உலகிற்கு சிறந்த புண்ணியத்தையும், ஹோமத் திரவியத்தையும் கொடுத்து உதவுகிறது.

பசுவின் கொம்பு, முகம், நாக்கு இவைகளில் தேவேந்திரன் இருக்கிறான்; எல்லா துவாரங்களிலும் வாயு இருக்கிறான்; கால்களில் - சப்த மருத்துகள்; கொண்டையில்- ருத்ரன்; வயிற்றில்-அக்னி; காம்புகளில்- சரஸ்வதி; கோமயத்தில்-லட்சுமி; மலத்தில்-கீர்த்தியும், கங்கையும்; பாலில்-மேதை; வாயில்- சந்திர பகவானும்

இதயத்தில் - எமனும்; வாலில் - தர்ம தேவதையும்; மயிர்க்கால்களில் - யாகம் முதலிய கிரியைகளும்; கண்களில் - சூரியனும்; பூட்டுக்களில் - சித்தர்களும்; அசைவில்- காரிய சித்தியும், தவமும், சக்தியும் உள்ளனர்.

கோ பூஜை முறை
கோ பூஜையில் பூமாலை, பட்டு வஸ்த்ரம், ஆகியவற்றைச் சாற்றி பசுவிற்கு பூஜை செய்வது வழக்கம். மற்ற தேவதைகளுக்குச் செய்யும் உபசாரங்கள் கோ பூஜையில், எல்லா தேவதைகளுக்கும் பாதங்களிலும், முகத்திலும் செய்யும் உபசாரங்கள் பசுமாட்டிற்கு மட்டும் பின்பகுதியில் செய்ய வேண்டும். நைவேத்யம் மட்டும் வாய் வழியாகக் கொடுக்க வேண்டும். கோ பூஜையில் காமதேனு என்ற தேவதையை மஹாலக்ஷ்மியின் உருவமாக த்யானம் செய்து ஆவாஹனம் செய்து, பிறகு ஜல, கந்த, புஷ்ப, தூப, தீபம் இவற்றுடன் சேர்ந்து மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரங்கள், ஸ்ரீஸூக்தம் முதலியவற்றை ஜபம் செய்யலாம். கோ பூஜைக்கு கன்றுக்குட்டியானது பசுவுடன் கூடவே இருக்கவேண்டும் என்பது முக்கியம். மந்த்ரங்களால் உபசாரம் செய்த நைவேத்யத்தை, அப்படியே பசுவிற்கு கொடுக்க வேண்டும்.

கோ பூஜையின் நன்மைகள்
  1. ஒருவர் தனக்கு தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் மற்றும் தோஷங்கள் நீங்க வழி செய்கிறது.
  2. பித்ரு தோஷங்கள், சாபங்கள் நீங்க வழி செய்கிறது.
  3. ஜீவ காருண்யத்திற்கு செய்த, பாபங்கள் போக்கிக் கொள்ள வழி செய்கிறது.
  4. அற்ப ஆயுள், கொடிய விபத்து, துர் மரணம் போன்றவைகளால் ஏற்படும் தீமைகள் தீர வழி செய்கிறது.
  5. மனிதனிடம் உள்ள தீய குணங்கள் அகல வழி செய்கிறது.
  6. பெற்றோர்களுக்கு செய்யக்கூடிய ஈமக்காரியங்கள் செய்யாமல் விடுபட்டவர்களுக்கு அதனால் ஏற்படும் தோஷங்கள் தீர வழி செய்கிறது.
  7.  குழந்தை வேண்டும் தம்பதிகளுக்கு குலம் தழைக்க வழி செய்கிறது.

எண்ணற்ற பாபங்களும், தோஷங்களும், சாபங்களும் நீங்கி மனிதன் புனிதம் அடையவும், வாழுமிடம் நல்ல முறையில் லட்சுமி கடாட்சத்துடன் அமைந்து மக்கள் செல்வத்துடன் செழிப்புடன் வாழவும், மன சஞ்சலங்கள் நீங்கி பயம் போக்கி ஆரோக்யத்துடன் வாழவும் ஒவ்வொரு இல்லத்திலும் ஆலயத்திலும், விசேஷ பூஜைகளிலும் கோ பூஜை செய்து முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்டு நலமுடன் வாழ வழி செய்கிறது.

அபிஜித் முகூர்த்தத்தின் சிறப்பு
ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள நேரமே அபிஜித் நேரம். பிரம்ம முகூர்த்தம் எப்படி நிர்மலான நேரம் எனப்பட்டதோ அதே போல் அபிஜித் காலமும் வெற்றிக்கான பூஜைகள் செய்திடும் காலம் ஆகும். ஜித்-என்றால் ஜெயித்தல், அபிஜித் என்றால் மிகச் சிறப்போடு வெற்றி பெறுதல் எனப்படும். 

அதாவது வழிபட்டால் வெற்றி கிட்டும் காலம். காலையில் சூரிய உதய காலத்திலிருந்து ஆறுமணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் இக்காலம் உத்திராடம் மூன்று நான்காம் பாதங்கள், திருவோணம், 1, 2-ம் பாதகங்கள் வருகின்ற ஒரு கால கட்டத்திலேதான் நான்முகனாகிய பிரம்மதேவன் பூமியையும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெற்றி பெற்று அடைந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

இந்த நேரம் வாழ்வில் வெற்றியைதரும், முன்னேற்றத்தை கொடுக்கும். தொழிற்கூடத்தை நிறுவி வியாபார ஏற்ற இறக்கத்தாலும், கிரகங்களின் தொந்தரவாலும் இழந்தவைகளைப் பெற்றிட இந்தநேரமானது உன்னதமான காலம் ஆகும். அபிஜித் காலத்திற்கு எந்தவிதமான தோஷமும் கிடையாது.

தன்வந்திரி பீடத்தில் நண்பகல் (அபிஜித் முகூர்த்தம்) கோபூஜை
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இதுவரையில் சுமார் 65 விக்ரகங்களையும், சிவலிங்க ரூபத்தில் 468 சித்தர்களையும் பிரதிஷ்டை செய்து தினசரி காலை சகல தேவதா காயத்ரீ ஹோமமும், மாலை கோடி நாம ஜப பிரார்த்தனையும், விசேஷ நாட்களில் சிறப்பு ஹோமங்களையும், கோ சம்ரக்ஷ்னையுடன் சமய பணி மற்றும் சமுதாய பணிகளையும் செய்து வரும் நமது சுவாமிகள் அன்றாடம் தன்வந்திரி பீடத்திற்கு வருகைபுரியும் பக்தர்களின் வேண்டுதலான குழந்தைபேறு, தொழில், வியாபாரம், திருமணம், தம்பதிகள் ஒற்றுமை போன்ற பல காரணங்கள் நிறைவேறவும், உலக நலன் கருதியும், க்ஷேத்திர அபிவிருத்தியை முன்னிட்டும், தோஷங்கள், பாபங்கள் நீக்கும் விதத்திலும் தினசரி நண்பகல் (அபிஜித் முகூர்த்த) வேளையில் மங்கள வாத்தியத்துடன் விசேஷ வேத விற்பன்னர்களைக் கொண்டு, தன்வந்திரி பகவானிடம் சங்கல்பம் செய்து, தன்வந்திரியை அழைத்து, தன்வந்திரியே கோ பூஜை செய்வதாக பாவித்து அந்த கோ பூஜைக்கு, பீடத்தில் அமைந்துள்ள தெய்வங்களும், மகான்களும், குருமார்களும், சித்தர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வகையில் காமதேனுவாக போற்றப்படுகின்ற கோமாதா என்கிற பசுவிற்கு கோ பூஜையை வருகிற விநாயக சதூர்த்தி முதல் 9.9.2013 திங்கட்கிழமை முதல் கோ பூஜை துவங்கப்பட உள்ளது. இந்த கோ பூஜையில் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய பிரார்த்திக்கிறோம்.

கோவுக்கே உரிய அரிசி, வெல்லம், அருகம்புல், அகத்திக் கீரை, வாழைப்பழம், வஸ்திரம், இதர பூஜை சாமான்கள் கொடுத்து கோமாதாவின் அருள் பெற்று கர்ம பிணி தீர்ந்து நலமுடன் வாழ கோ பூஜை வழி செய்கிறது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை - 632513. வேலூர் மாவட்டம்,
தொலைபேசி : 04172-230033. செல் : 9443330203
email : danvantripeedam@gmail.com
www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in

No comments:

Post a Comment