Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, October 12, 2022

Purattasi Puthan Sri Sudharsana Azwar Special Poojai at Sri Danvantri Arokya Peedam

புரட்டாசி புதன்கிழமை ஸ்ரீ தன்வந்திரி பகவான், ஸ்ரீ சுதர்சன ஆழ்வாருக்கு  சிறப்பு பூஜை 

வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, புரட்டாசி மாத புதன்கிழமை முன்னிட்டு  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கும், ஸ்ரீ சுதர்சன ஆழ்வாருக்கும்  (சக்கரத்தாழ்வார்) சிறப்பு பூஜை நடைபெற்றது. 

புரட்டாசி புதன்கிழமைகளில்  ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு பூஜைகள் செய்து தரிசிப்பதும், பிரார்த்தனை செய்வதும்  மும்மடங்கு பலன்களை தரும் என்பது ஐதீகம் என்பதால் பெருமாளின் சக்கரமாக விளங்கும் ஸ்ரீ சுதர்சன ஆழ்வார்க்கு சிறப்பு ஹோமம், அபிஷேக பூஜைகளும்,  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு  பூஜையும்  செய்து,  பக்தர்களின் துன்பங்கள், துயரங்கள் போக்கவும், எதிர்ப்புகள், தீய சக்திகள் அன்டாமல் இருக்கவும், சகலவிதமான  பாவங்கள், தோஷங்கள்  நீங்கிட  பிரார்த்தனை செய்யப்பட்டது. 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  பக்தர்களுக்கு  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.






No comments:

Post a Comment