Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, October 7, 2022

Pirathosam Poojai





 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதோஷ பூஜை 

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  இன்று அக்டோபர் 7ம்தேதி(வெள்ளிக்கிழமை) பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கும்,  ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதீஸ்வரருக்கும்  பஞ்ச திரவியங்களுடன்  சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  உள்ள ஸ்ரீ மரகதேஸ்வரர்  பீடத்திலேயே நந்தி பகவானும் இடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பு வேறு எங்கும் இல்லை என கூறி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

 பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு   யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.முரளிதரஸ்வாமிகள் ஆசியுடன், பிரசாதமும் வழங்கினார். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

---

No comments:

Post a Comment