Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, October 10, 2022

Adiprathatchanam at Sri Danvantri Arokya Peedam





 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்அடித்தட்டு மக்களின் வாழ்வியல் ரீதியாக ஏற்படும் தடைகள் நீங்கி ஆரோக்யம் மேம்பட வேண்டி அடிப்பிரதட்சணம் 

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,   இன்று 10ம்தேதி  திங்கள்கிழமை அடித்தட்டு மக்களின் வாழ்வியல் ரீதியாக ஏற்படும் தடைகள் நீங்கி  ஆரோக்கியம்  மேம்பட,  வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகிட வேண்டி அடிப்பிரதட்சணம்  நடைபெற்றது. 

அடிப்பிரதட்சணத்தை ஒட்டி  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அடிப்பிரதட்சணம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கும், ஸ்ரீ தன்வந்திரி வினாயகருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு  தேங்காய்கள் சிதறு காய்களாக  விடப்பட்டு, அடித்தட்டு  மக்களின் வாழ்வியல் ரீதியாக ஏற்படும் தடைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படவும், வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகிட வேண்டி  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  

பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள்  பிரசாதமும், ஆசியும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment